(வீடியோ).,படுகொலை செய்யப்பட்ட மர்ஹும் அமீன் ஞாபகார்த்த உதைப்பந்தாட்டத்தில் பிரதம அதிதீயாக அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட றியாழ்…
(ihzana fareed)
கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் தனிப்பட்ட காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்ட ஜே.அமீனின் பெயரால் பிறைந்துறைச்சேனை வேல்ட் ஸ்ட்டார் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுபோட்டியின் அரை இறுதி போட்டியில் பிரதம அதிதீயாக குறித்த கொலையினை செய்ததாக அநியாயமாக குற்றம் சுமர்த்தப்பட்டவரும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கல்குடாவில் போட்டியிட்டவருமான கணக்கறிஞர் றியாழ் கலந்து கொண்டமை பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்த விடயமாக இருந்தது.
இன்று 21.04.2017 வாழைச்சேனை வீசி பொது மைதானத்தில் இடம் பெற்ற குறித்த அரையிறுதி போட்டியில் வாழைச்சேனை நியூஸ்ட்டார் விளையாட்டுக்கழகமும் பிறைந்துறைச்சேனை வேல்ட் ஸ்ட்டார் கழகமும் பலப்பரீட்ச்சை நடத்தியதில் இறுதியில் தண்டனை உதைகளின் மூலம் வேல்ட் ஸ்ட்டார் விளையாட்டுக்கழகம் இறுதி போட்டிக்கு தெரிவானது. குறித்த நிகழ்வில் பிரபல பொருளியல் ஆசிரியரும் முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான எச்.எம்.எம்,பாக்கீர் மற்றும் சுற்றுபோட்டிக்கு பூரண அனுசரணை வழங்கிய சமூக சிந்தனையாளர் சாட்டோ வை.எல்.மன்சூர் ஆகியோர் விஷேட அதிதீகளாக கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வின் காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments
Post a Comment