கம்பஹா பெண்ணுக்கு மிருகங்களின் மருந்து; அமைச்சில் முறைப்பாடு


கம்பஹா, அஸ்கிரிய பகுதி மருந்தகம் ஒன்றில் கையில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து பெறச் சென்ற பெண் ஒருவருக்கு மிருகங்களுக்குக் கொடுக்கும் மருந்து மாற்றி வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து கம்பஹா சுகாதார அமைச்சு அலுவலகத்தில் இதற்கான முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனிதர்களுக்கான மருந்துடன் இவ்வாறு மிருகங்களின் மருந்துகள் கலந்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

Comments