மஹிந்தவின் வாகனத்துக்கு இடையூறு; தற்செயல் என அறிவிப்பு
கடந்த 6ம் திகதி நாடாளுமன்றிலிருந்து மஹிந்த ராஜபக்ச சென்று கொண்டிருநத வேளையில் திடீரென அவரது வாகனத்துக்கு முன்னால் வேறு ஒரு வாகனம் திடீரென புகுந்து பதட்டத்தை உருவாக்கிய விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணை தேவையில்லையென தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
குறித்த சம்பவம் தற்செயலாக இடம்பெற்றதெனவும் சீனாவில் மருத்துவம் பயிலும் மாணவனே இவ்வாறு வாகனத்தை இடையறுத்துள்ள நிலையில் முதற் கட்ட விசாரணையில் அது தற்செயலாக இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே மேலதிக விசாரணைகள் அவசியமில்லையென மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment