மதத் தலைவர்களின் வழிகாட்டல்களே சர்வதேச சண்டைகளுக்கு தீர்வு தரும்
எம்.ஆர்.எம்.வஸீம்)
சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரி
உலகில் இடம்பெறும் சண்டை மற்றும் பிரச்சினைகளுக்கு அரசியல் வாதிகளால் வழங்கப்படும் தீர்வுகளைவிட மதத்தலைவர்களால் வழங்கப்படும் வழிகாட்டல் மற்றும் தீர்வுகளே சிறப்பானது.
அத்துடன் உலகில் இருக்கும் அனைத்து நாட்டு அரச தலைவர்களும் போர் ஆயுதங்களை தயாரிப்பதை தடைசெய்வார்களாக இருந்தால் அதுவே உலகில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த வழியாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரவித்தார்.
ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரம் மற்றும் வழிகாட்டல்கள் அமைச்சுடன் இணைந்து நடத்தும் 'இஸ்லாமிய யதார்த்தமும் சமகால சவால்களும்' எனும் தொனிப்பொருளிலான சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
இஸ்லாத்தின் மகிமை அது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக பலரும் இங்கு உரையாற்றினர். சமூக வாழ்வில் அனைத்து துறைகளிலும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் இருப்பது சாதாரணவிடயம்.
சமூக ரீதியிலும் கலாசார முறைமைகளை பின்பற்றும்போதும் அரசியல் நிரவாகம் மற்றும் மொழி ரீதியில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் போன்று அனைத்து துறைகளிலும் பிரச்சினைகள் சவால்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றினூடாக ஆரோக்கியமானதொரு நிலைக்கு செல்லவே மனித சமூகம் எதிர்பார்க்கின்றது.
அன்றாட மற்றும் சமூகவாழ்வில் மனிதர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது தொடர்பாக நபிகள் நாயகத்தின் போதனைகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. உலகில் இடம்பெறும் சண்டை மற்றும் பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளால் வழங்கப்படும் தீர்வுகளைவிட மதத்தலைவர்களால் வழங்கப்படும் வழிகாட்டல் மற்றும் தீர்வுகளே சிறப்பானது என நான் நம்புகின்றேன்.
அதேபோன்று அல் குர்ஆன், பைபிள், பகவத்கீதை மற்றும் பௌத்த போதனைகள் அனைத்தும் ஒழுக்கமுள்ள மனித சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான வழிகாட்டல்கள்தான் இன்றைய நவீன் தொழிநுட்பத்துடனான மனித வாழ்வின் சிறந்த எதிர்காலத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் அடிப்படையாக இருந்துவருகின்றன. இன்று உலகில் இடம்பெறும் பிரச்சினைகள், சச்சரவுகள் தொடர்பாக பலரும் கதைக்கின்றனர். இந்தப் பிரச்சினைகள் சண்டைகள் அனைத்தும் அதிகாரத்துக்கும் வருமானத்துக்குமே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் இறுதித் தீர்வாவது மனிதன் மற்ற மனிதனை கொலைசெய்வதிலே முடிவடைகின்றது
அதபோன்று இன்று உலக நாடுகள் யுத்தங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்காக கலந்தாலோசனைகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவேண்டியது யுத்தம் இடம்பெறும் நாடுகளுடன் அல்ல. மாறாக யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுடனே கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என நான் நம்புகின்றேன். அத்துடன் உலகில் யுத்த ஆயுதங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அதன் மூலம் தங்கள் வருமானத்தை ஈட்டிக்கொள்ளாமல் வேறு முறைகளில் வருமானத்தை தேடிக்கொள்ள முயற்சித்தால் உலகில் எங்கும் யுத்தம் இடம்பெறாது.
எனறாலும் அனேகமானவர்கள் யுத்தத்தை மேற்கொள்ளும் இரு தரப்பினர்களுடன் மாத்திரமே பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர்.ஆனால் உலகில் இருக்கும் அனைத்து நாட்டு அரச தலைவர்களும் யுத்த ஆயுதங்களை தயாரிப்பதை தடைசெய்யுமாக இருந்தால் அதுவே உலகில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு சிறந்த வழியாகும் என நான் நம்புகின்றேன்
மேலும் எமது நாடு பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருக்கும்போது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவந்தனர். சகல இனத் தலைவர்களும் ஒன்றுபட்டு போராடியதால் எமது நாடு பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரமடைய முடியுமாகியது. என்றாலும் பிரித்தானிய ஆட்சியிலிருந்து நாங்கள் சுதந்திரமடைந்ததன் பின்னர் குறிப்பாக அரசியல் அதிகாரத்துக்காக நாங்கள் பிளவுபட ஆரம்பித்தோம்
நாங்கள் அனைத்து இனமக்களும் ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் இலங்கையர் என்ற அடிப்படையில் வாழ்வதை இலட்சியமாகக்கொண்டு செயற்பட்டால் நாங்கள் எதிர்பார்க்கும் சமாதானமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்பமுடியும். நாங்கள் கதைக்கும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதென்றால் எங்களை விட மற்றவர்களின் உரிமைகளை மதித்து ஒற்றுமையாக வாழ்வதற்கு முயற்சிக்கவேண்டும்
எனவே, ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரம் மற்றும் வழிகாட்டல்கள் அமைச்சுடன் இணைந்து நடத்தும் இம்மாநாட்டின் ஊடாக நாட்டில் நல்லிணக்கம் மற்றும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு ஏற்படப் பிரார்த்திக்கின்றேன் என்றார்.

Comments
Post a Comment