மீதொட்டமுல்ல அனர்த்தம்; அரசியல் பழிவாங்கல்: மஹிந்த!
தமது அரசு முன்னெடுத்த நல்ல காரியங்களைக் கூட அரசியல் பழிவாங்கலுக்காக நடைமுறையரசு கை விட்டதன் விளைவே மீதொட்டமுல்ல அனர்த்தம் என தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
நேற்றைய தினம் கண்டியில் வைத்து இது தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த மஹிந்த, தம்மைப் பழிவாங்க நினைத்து அரசாங்கம் மண்ணை அள்ளிக் கொட்டிக்கொண்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment