தவத்தின் நெறிப்படுத்தலில் புத்தர் சிலைக்கு எதிராக அக்கரைப்பற்றில் ஆரப்பாட்டம்
(றியாஸ் இஸ்மாயில் , எஸ்.எம்.அறூஸ்)
இறக்காமம் மாயக்கல்வி மலை சிலை வைப்பு மற்றும் இனவாத செயற்பாடுகளை எதிர்த்து அக்கரைப்பற்று இளைஞர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று (28.04.2017) அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயல் முன்பாக ஜும்ஆத் தொழுகையின் பின்னர் அமைதிக் கவன ஈப்புப் போராட்டமும் மகஜர் கையளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் நெறிப்படுத்தலில் மூலம் அக்கரைப்பற்று இளைஞர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இவ் அமைதிப் பேரணியை நடத்தியுள்ளனர்.
இதன் போது தொழுகையின் பின்னர் இளைஞர்கள் பள்ளிவாசல் முன்பாக ஆரம்பமாகி பிரதான வீதியில் ஊர்வலமாக நல்லாட்சி அரசே அப்பாவி முஸ்லீம்களை பலிவாங்கும் இனவாதிகளை கைது செய்,
இன்னுமொரு பயங்கரம் வேண்டாம் நாம் ஐக்கியத்தை விரும்புகின்றோம்,நல்லாட்சியில் சிறுபான்மைக்கு பாதுகாப்பில்லையா?முஸ்லிம்கள் கறிவேப்பிலையா?,
சிறுபான்மையை புறக்கனிப்பதுதான் நல்லாட்சியா?,வயற்காணிகளுமில்லை வாழிடங்களுமில்லை இலங்கை முஸ்லீம்கள் இந்நாட்டு பிரஜைகளில்லையா?,
மாவட்ட அரச அதிபரே ஏழை முஸ்லிம்களை வதைக்காதீர்,அதிமேதகு ஜனாதிபதியே இனவாதிகளுக்கு அடிபணியாதீர் போன்ற வாசகங்களை கூறி ஒலி எழுப்பியவாறு இஞைர்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தை நோக்கி பேணர் மற்றும் போஸ்டர்கள் ஏந்தியவாறு சென்ற வேளை பிரதான வீதியில் எம்.பீ.ஐ.ஏரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலயப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தலைமையிலான குழுவினால் இப்பேரணி தடுக்கப்பட்டது.ஏனெனில் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்படததன் காரணமாகும்.
பின்னர் இறக்காமம் மாயக்கல்லி மலைக் காணியை மீட்பதற்கான மகஜரினை அம்பாறை மாவட்ட அரச அதிபருக்கு வழங்குவதற்காக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல்லத்தீப் அவ்விடத்திற்கு பொலிஸாரினால் வரவழைக்கப்பட்டு இளைஞர்களினால் குறிப்பிட்ட மகஜர் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பேரணியில் இளைஞர்கள் பொதுமக்கள் மற்றும் புத்துஜீவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment