இடிந்து விழும் நிலையில் குறிஞ்சாக்கேணி பாலம்


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பழுதடைந்த குறிஞ்சாக்கேணி பாலம் தற்காலிகமாக இரும்புக் கம்பியினால் ஆக்கப்பட்டுள்ளது.

கடந்த தடவை ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பாலத்தினை புனரமைத்துத் தருவதாக தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ள நிலையில் பாலம் இடிந்து விழும் நிலை காணப்படுவதால் பொது மக்கள் இது குறித்து அச்சம் வெளியிட்டுள்ளனர்.

மாவட்டத்தில் மூன்று பாராளுமன்றர்கள் இருந்தும் இது குறித்து கவனமெடுக்கவில்லையென மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments