தாயும் இரண்டு குழந்தைகளும் சடலமாக மீட்பு : அனுராதப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்
அநுராதபுரம் விஹாரபாலுகம பிரதேசத்தில் இருந்து மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 35 வயது மதிக்க தக்க பெண்ணொருவர், 1 வயது மற்றும் 4 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலங்கள் பொலிஸாரினால் மீட்கப்படும் போது, பெண் தூக்கில் தொங்கிய நிலையிலும், இரண்டு குழந்தைகளும் வீட்டிற்குள்ளே இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment