விமலின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு.!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், விமல் வீரவங்ச ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Comments
Post a Comment