மௌனியாக இருந்தால் உரிமைகள் பறிபோகும்: மனோ கணேஷன்
நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சி நடாத்தினாலும் சிறுபான்மை மக்கள் மௌனிகளாக இருந்தால் உரிமைகள் பறிபோவதைத் தடுக்க முடியாது போய்விடும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேஷன்.
லண்டன் சென்றிருக்கும் அவர், சோனகர்.கொம் பிரதம ஆசிரியர் இர்பான் இக்பாலுடன் இடம்பெற்ற பிரத்யேக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எனும் அடிப்படையில் தமக்கு எப்போதும் வழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தேவையிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த அரசிலும் பல்வேறு வகையிலான அழுத்தங்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் பொதுத் தளத்தில் நின்று குரல் கொடுப்பதற்கான வெற்றிடம் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment