கந்தளாய் மையவாடி பாலம் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பம்.
-Ayas Ahamed-
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பேராற்று வெளி மையவாடி பாலத்தை சுமார் 1 கோடி ரூபாய் செலவில் புனர் நிரணம் செய்யப்படவுள்ளன. இப் பாலத்தின் நிர்மாணப் பணியை உத்தியோகபூர்வ பார்வேயிடுவதற்காக பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலம இன்று (29) சனிக்கிழமை வருகைதந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன இதனை பார்வையிட்ட அமைச்சர் கருத்து தெரிவிக்கையில். இதற்கான இரண்டாம் கட்ட வேலைகள் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு சுமார் 45 நாட்கள் அல்லது 60 நாட்களில் இதன் முழுமையான வேலையினை செய்து இதனை மக்கள் பாவனைக்கு கையளிப்பேன் என்று மக்களிடம் அமைச்சர் உறுதியளித்தார். இந்த நிகழ்வில் சர்ஸ்தீன் ஆசிரியரும் கலந்து கொண்டார்









Comments
Post a Comment