வாகனங்களின் விலையில் மாற்றம்! :  இரண்டு இலட்சம் வரை உயரும் வாய்ப்பு!


ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யும் வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பானிய யென்னின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால், வாகனங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தினேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி 5 மில்லியன் பெறுமதியான வாகனங்களின் விலை சுமார் 2 இலட்சம் வரை  அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

எவ்வாறாயினும் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் தினேஸ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments