ஜப்பான் செல்கிறார் பிரதமர்..!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 10 ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தின் போது எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஜப்பானில் தங்கவுள்ள பிரதமர், அந்நாட்டு பிரதமர் சின்சோ அபே (Shinzo Abe) உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விஜயத்தின் போது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் குறித்த விஜயத்தின் போது, அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம , மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் அசு மாரசிங்க ,பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க , மற்றும் பிரதமரது பாரியார் உள்ளிட்டோர் உடன் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments