தோப்பூர் சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இரத்த தானம்



ihzana fareed

திருகோணமலை தோப்பூர் சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் இரத்ததான முகாம் இடம் பெற்றது.

தற்போது திருகோணமலை மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு, இன்புளூவன்சா போன்ற தொற்று நோய்களினால் சிறுவர்கள், பெரியோர்கள், கற்பணி தாய்மார்கள் என அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதோடு விபத்துக்களும் அதிகரித்து காணப்படுகின்றன.அத்தோடு மூதூர், கிண்ணியா, திருகோணமலை போன்ற வைத்தியசாலைகளில் இரத்த வங்கியில் இரத்தத் தட்டுப்பாடும் நிலவி வருகின்றது.

அந்த வகையில் இரத்தத் தட்டுப்பாட்டை ஓரளவேனும் தீர்க்கும் வகையில் இவ் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தோப்பூர் சமூக அபிவிருத்தி பேரவையின் செயலாளர் எப்.ஹாரீஸ் தெரிவித்தார்.இன்றைய இரத்ததான நிகழ்வில் இளைஞர்கள், பெரியோர்கள், பெண்களென 50 க்கும் அதிகமானோர் இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments