திட்டத்தை நடைமுறைப்படுத்த முன், அனர்த்தம் ஏற்பட்டுள்ளது - ரணில் கவலை


மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும், இருப்பிடங்களை இழந்தோருக்கும், அரசாங்கம் தனது கவலையை தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், குப்பையை அகற்றும் பொறுப்பை அரசாங்கம் கூடிய விரைவில் நிறைவேற்றும் என குறிப்பிட்டுள்ளார்.

மீதொட்டமுல்ல குப்பை மேட்டை அகற்றுவதற்கு தேவையான திட்டத்தை வகுத்து அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னரே இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இது கவலைக்குரிய விடயம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments