கந்தளாய் மத்ரஸாநகர்- இரண்டாம் குலனியையும் இணைக்கும் பிரதான பாலத்தினை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை


திருகோணமலை கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட மத்ரஸா நகரையும்,இரண்டாய் குலனியையும் இணைக்கும் பிரதான பாலம் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சேதமடைந்த நிலையிலும், போக்குவரத்துகள் செய்ய முடியாத நிலையிலும் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையோடு அங்கலாய்கின்றனர்.

தேர்தல் காலங்களில் வருகின்ற அரசியல் வாதிகள் அப்பாலத்தினை அக்கரையோடு பார்வையிட்டு பொய் வாக்குறுதிகளை பாமர மக்களிடம் அளித்துவிட்டுச் செல்வதாகவும், இவ்வாராகவே பத்து வருடங்களுக்கு மேலாக ஆகிவிட்டதாகவும் மக்கள் முறையிடுகின்றனர்.

மழை காலங்களில் பாலத்துக்கு மேலாக நீர் செல்வதாகவும், ஈருளி வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலையில் இப்பாலம் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இப்பாலத்தினை பயன்படுத்தி பாடசாலை மாணவர்கள்,பிரதேச மக்கள் எனப்பலரும் தினமும் பயன்படுத்தக்கூடியதாக இருந்துள்ளது.இப்பாலத்தினை புனரமைத்து தருமாறு கந்தளாய் பிரதேச சபையிடம் கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்நல்லாட்சியிலாவது இரண்டு கிராமங்களை இணைக்கும் பிரதான பாலத்தினை மக்கள் நலன் கருதி புனரமைத்து தருமாறு மக்கள் வினையமாக கேட்கின்றனர்.

Comments