கிண்ணியாவில் களவில் மாடுகளை அறுத்தவர்கள் கைது
திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் கள்ள மாடுகளை அறுத்து விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் நால்வர் இன்று 13 வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியாவில் கடை யொன்றுக்கு இறைச்சியை விற்று மற்றொரு கடைக்கு கொண்டு செல்லும் போது இதனை கண்ணுற்றவர்கள் பொலிஸாருக்கு வழங்கியுள்ள தகவல் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் உழவு இயந்திர சாரதி ஒருவரும் மற்றும் உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா பிரதேசத்தில் அண்மைக் காலங்களாக பலரின் கால் நடைகள் திருடப்பட்டும், பல இடங்களில் அறுத்து எச்சங்களை விட்டு செல்லப் படும் சம்பவங்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது.
இது தொடர்பாக கிண்ணியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment