இறக்காமம் கந்தூரி விவகாரம் : இரு சமையற்காரர்களுக்கு தொடர்ந்தும் தடுப்புக்காவல்

-விடி வெள்ளி

அம்­பாறை இறக்­காமம் பிர­தேச செய­லகப் பிரி­விற்­குட்­பட்ட வாங்­கா­மத்தில் வழங்­கப்­பட்ட கந்­தூரி உணவு நஞ­சா­னது தொடர்பில் கைது செய்­யப்­பட்டு அம்­பாறை மாவட்ட நீதி­மன்­றத்­தினால் இரண்டு இல­சட்­சத்து 50ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடு­விக்­கப்­பட்ட இரு சமை­யல்­கா­ரர்­க­ளுக்கும் பிணையை ஏற்க எவரும் முன்­வ­ரா­ததால் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

குறிப்­பிட்ட சரீரப் பிணைக்கு முன்­வ­ருவோர் தமனைப் பொலிஸ் பிரி­விற்­குட்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும் என்ற நீதி­மன்ற நிபந்­த­னையை அடுத்து இதற்கு இப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த எவ­ரையும் முன் நிறுத்­தா­ததால் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த புதன்­கி­ழமை 5 ஆம் திகதி இறக்­காமம் பிர­தே­சத்தில் உணவு ஒவ்­வாமை கார­ண­மாக திடீ­ரென ஏற்­பட்ட அனர்த்­தத்­தின்­போது பாதிக்­கப்­பட்ட மக்கள் உண்ட உணவை சமைத்த சமை­யல்­கா­ரர்­க­ளான அக்­க­ரைப்­பற்று முதலாம் பிரிவைச் சேர்ந்த சுபைதீன் முன்சீக், அலியார் றிகாஸ் ஆகியோர் சந்­தே­கத்தின் பேரில் தமனை பொலிஸாரால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்டு நீதிமன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்கள் இரு­வ­ரையும் எதிர்­வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

இதே­வேளை, தமனை பொலிஸார் அன்­ன­தானம் வழங்­கிய வாங்­காமம் முகை­யித்தீன் ஜும்ஆப் பள்­ளி­வாசல் தலைவர் மற்றும் செய­லாளர் உட்­பட சமை­ய­லுக்­காக வழங்­கப்­பட்ட மாட்டு சொந்­தக்­கா­ரர்கள் நால்­வ­ரையும் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அத்­துடன் குறிப்­பிட்ட மாடு­களை அறுத்த மௌல­வி­யையும், மேலு­மொரு நப­ரையும் பொலிஸார் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

இது இவ்­வாறு இருக்க பகுப்­பாய்­வுக்­காக பொலி­ஸாரால் கொழும்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட சமைய­லுக்­காக பயன்­ப­டுத்­திய உப­க­ர­ணங்கள் மற்றும் மாதி­ரி­களின் அறிக்கை சித்­திரைப் புத்­தாண்டு விடு­மு­றையால் சற்றுத் தாம­த­மா­க­லா­மென பொலீஸார் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, இறக்­காமம் பிர­தே­சத்தில் உணவு ஒவ்­வாமை கார­ண­மாக பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­களின் எண்­ணிக்கை குறைந்து வரு­வ­தாக கல்­முனைப் பிராந்­திய சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் ஏ.அலா­வுதீன் தெரி­வித்தார்.  

தற்­போது அம்­பாறை, சம்­மாந்­துறை, கல்­முனை, அக்­க­ரைப்­பற்று, பால­முனை, அட்­டா­ளைச்­சேனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைந்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

மேற்படி சம்பவத்தில் மூவர் மரணமடைந்ததுடன் 1000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments