அரசியல் அதிகாரத்தை வைத்து கொக்கரிப்பதல்ல: செய்து காட்டவேண்டும்

அஸ்மி அப்துல் கபூர்

மகிந்த ராஜபக்ச வின் அரசு நிறுவப்படுவதற்க்கு முன்னர் அவரை அக்கரைப்பற்றுக்கு அழைத்து வந்த தேசிய காங்கிஸ் தலைவர் அதாஉல்லாஹ் இரண்டு விடயங்களை பகிரங்கமாக முன் வைத்தார்.

கோர யுத்தம் நிறைவடைய வேண்டும்.

வடக்கு கிழக்கு பிரிக்கப்பட வேண்டும்.

அல்லாஹ் வினுடைய உதவியால் அவை நிறைவேறியது.

மகிந்தவினுடைய ஆட்சியில் தங்களது சுய நலனுக்காக அனைவரும் அமைச்சர்களாக வலம் வந்தார்கள்.தம்மால் வாயை திறந்து எதுவும் கேட்க முடியாத அளவு தமது பிடிகளை மகிந்தவிடம் வழங்கிய நிலையில் தமிழ் ஊடகங்களுக்கு முன்னால் மாத்திரம் சண்டித்தனம் பேசி மக்களின் உணர்ச்சிகளை தூண்டி நாடகங்களை அரங்கேற்றினர்.

அதாஉல்லாஹ் என்கின்ற ஒரு பாராளுமன்ற உருப்புரிமையால் தனது பிரதேசத்துக்கு வேண்டிய அனைத்து பணிகளையும் தரமான முறையில் முன்னெடுக்க கூடியவாறு இருந்தது.

அந்த ஆட்சியில் பிரதான பங்காளியாக இருந்த சம்பிக ரணவக்க தலைமையிலான இனவாத அமைப்பினால் சில விடயங்களை அரசினுள் பேசி நிறைவு செய்ய முடியாமல் இருந்தது.

ஞானசார உள்ளிட்ட குழுக்களுக்கும் அரசினுள் இருந்து கொண்டு சம்பிக்க ரணவக்க ஆதரவு வழங்கினார்.
உடனடியாக தேர்தல் அறிவிக்கப்பட்ட போது சம்பிக்க பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கி நாம் திட்டமிட்ட பிரகாரம் சர்வதேசத்தின் உதவியோடு ஞானசாரவினுடாக முஸ்லீம்களை குழப்பி ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி காட்டினார்.

இப்போது முஸ்லீம்கள் முழுமையாக வாக்களித்து உருவாக்கிய நல்லாட்சி தலைவர்கள் கோடிகளை பெற்று பதவிகளுக் காக ஒப்பந்தங்களும் செய்து அவற்றை அடைந்தும் கொண்டனர்.

அதே சம்பிக்க ஆட்சியின் பங்காளி எம் தலைவர்களால் உள்ளே இருக்கின்ற இனவாதியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழலில் மீண்டும் மக்களை சூடாக்கவும் பத்திரிகைகளில் அறிக்கை விடவும் தயாராகி விட்டனர்.

ஆட்சியின் பங்களார் ஏன்கின்றவர்களால் மத்தியில் மாகாணத்தில் அதிகாரத்தில் இருக்கின்றவர்களால் பிரேரனை என்றும் உண்ணாவிரதமென்றும் மக்களை சூடாக்கின்ற வசனங்களை பேசுவதும் எதற்காக?
நாட்டு தலைவர்களுடன் பேசி முடிவுகளை பெற முடியாதா?
தமிழர்கள் எதிர் தரப்பு அரசியல் செய்து கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்குகின்றனர்.
நாம் ஆட்சியின் பங்காளிகள் என்றால் ஏன் பேச முடியாது.

முஸ்லிம் மக்கள்மீது திணிக்கப்பட்ட அனைத்து இனவாத செயற்படுகளுக்கு சம்பிக்க ரணவக்க காரணமானவர்.

அவரை அதிகாரம் பொருந்திய அமைச்சராக வைத்திருக்கும் அரசில் முஸ்லீம்களின் நலன் தொடர்பில் பேச எம்மவர்களின் உரிமைகளை வென்றெடுக்க புறப்பட்ட தலைமை வேண்டும்

அவ்வாறன ஒருதலைமைக்கான அங்கீகாரத்தை மக்கள் ஒற்றுமையுடன் வழங்க முன் வர வேண்டும்.இன்று இருக்கின்ற சுயநல அரசியல் தலைவர்களால் நல்லாட்சி அல்ல என்ன ஆட்சி வந்தாலும் சமுகத்திற்காக எதுவுமே செய்து கொள்ள முடியாது.

Comments