முச­லியில் சகல முஸ்லிம் குடி­யி­ருப்­பு­களும் வர்த்­த­மா­னியால் விடு­விக்­கப்­பட வேண்டும்


முச­லியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
வில்­பத்து பகு­தியை அண்­டிய பிர­தே­சத்தில், 20 வரு­டங்­க­ளாக மக்கள் குடி­யி­ருக்­காத கார­ணத்­தினால் வன பரி­பா­லனத் திணைக்­க­ளத்­தினால் பாது­காப்பு வல­ய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மக்கள் குடி­யி­ருப்பு காணி­களை, ஜனா­தி­பதி மற்றும் அமைச்­ச­ரவை மட்­டத்தில் பேசி அதனை விடு­வித்துக் கொடுப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

வில்­பத்து விவ­காரம் தொடர்பில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் விசேட செய­ல­மர்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தலை­மையில் நேற்­றைய தினம் முசலி பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்­றது. அதில் கருத்து தெரி­விக்­கும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

மறிச்­சுக்­கட்டி, கர­டிக்­குழி, பாலக்­குழி, கொண்­டச்சி போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள காணிகள் 2012 ஆம் ஆண்டு வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் வன இலா­கா­வுக்கு சொந்­த­மான காணி­யாக அறி­விக்­கப்­பட்­டது. இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் பிர­சு­ரிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் மக்கள் கருத்­த­றி­வ­தற்­காக வழங்­கப்­பட்ட கால அவ­கா­சத்தில் யாரும் முறைப்­பாடு செய்­யாத கார­ணத்­தினால், அந்த அறி­வித்தல் அப்­ப­டியே வெளி­யி­டப்­பட்­ட­தாக வன பரி­பா­லனத் திணைக்­கள அதி­காரி தெரி­வித்தார்.

இதற்குப் பதி­ல­ளித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், பொது­வாக வர்த்­த­மானி அறி­வித்தல் பிர­சு­ரிப்­ப­தற்கு முன்னர் மக்கள் கருத்­த­றி­வ­தற்­காக 14 நாட்கள் கால அவ­காசம் வழங்­கப்­ப­டு­வது வழக்கம். ஆனால், அந்த வர்த்­த­மானி அறி­வித்தல் 11 நாட்­க­ளி­லேயே, அதா­வது 3 நாட்­க­ளுக்கு முன்னர் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. ஆகவே, இது­வொரு சட்­டத்­துக்கு முர­ணான அறி­விப்பு என்­பதை சுட்­டிக்­காட்­டினார். அரச அதி­கா­ரி­களும் அதனை ஏற்­றுக்­கொண்­டார்கள்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
1990ஆம் ஆண்டு முஸ்­லிம்கள் வடக்­கி­லி­ருந்து பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட பின்னர், 22 வரு­டங்­களால் மக்கள் தங்­க­ளது காணி­களில் குடி­யி­ருக்­காத நிலையில், அவற்றில் வளர்ந்­துள்ள காடு­களை வைத்து, 2012 ஆம் ஆண்டு சட்­டத்­துக்கு முர­ணான வகையில் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் மீள் பரி­சீ­லனை செய்­யப்­ப­ட­வேண்டும்.

முஸ்­லிம்கள் 1990 ஆம் ஆண்டு வெளி­யேற்­றப்­பட்ட பின்னர், முசலி பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட கிராம சேவகர் பிரி­வுகள் இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் மூல­மாக வன இலா­கா­வுக்கு சொந்­த­மான இட­ங்களாக மாற்­றப்­பட்­டுள்­ளன. எனவே, 1990 ஆம் ஆண்டு எந்­தெந்த பிர­தே­சங்கள் மக்கள் வசிப்­பி­டங்­க­ளாக காணப்­பட்­டதோ அவை அனைத்தும் வன பாது­காப்பு திணைக்­க­ளத்­தினால் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும்.

மேற்­படி வர்த்­த­மானி அறி­வித்­தலை மேலும் நியா­யப்­ப­டுத்தும் வகையில், அண்­மையில் ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலும் மீள்­ப­ரி­சீ­ல­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். முறை­யான வழி­காட்­டல்கள் இல்­லாத நிலை­யி­லேயே இந்த இரு வர்த்­த­மானி அறி­வித்­தல்­களும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன என்றார்.

பேரா­தனை பல்­க­லைக்­க­ழக புவி­யி­யல்­துறை பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லா மற்றும் விரி­வு­ரை­யாளர் நௌபல் ஆகியோர் வில்­பத்து விவ­காரம் தொடர்பில் தெளி­வான விளக்­கங்­களை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு தர­வு­க­ளுடன் வழங்­கி­னார்கள். புத்­தளம் மற்றும் அனு­ரா­த­புரம் மாவட்­டங்­களை அண்­டிய வில்­பத்து காட்டுப் பகு­தியே அழிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது தவிர, மன்னார் மாவட்­டத்தை அண்­டிய காட்­டுப்­ப­குதி அழிக்­கப்­ப­ட­வில்லை.

மக்கள் குடி­யி­ருப்­புள்ள மன்னார் மாவட்­டத்தின் மறிச்­சுக்­கட்டி, கர­டிக்­குழி, பாலக்­குழி, கொண்­டச்சி போன்ற பிர­தே­சத்தில் எவ்­வி­த­மான காட­ழிப்பும் நடை­பெ­ற­வில்லை என்­பதை அவர்கள் வன பரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள், வன ஜீவ­ரா­சிகள் திணைக்­கள விளங்­கப்­ப­டுத்­தி­னார்கள். அதில் கூறப்­பட்ட பல விட­யங்­களை சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களும் ஏற்­றுக்­கொண்­டனர். 

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான முஸ்லிம் காங்­கிரஸ் குழு­வினர் அண்­மையில் ஜனா­தி­பதி செய­லா­ளரை சந்­திந்து வில்­பத்து விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டிய பின்­னரே இந்த சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

அதன் பின்னர் ஜனா­தி­பதி செய­லக அதி­கா­ரி­க­ளுடன் வன பரி­பா­லன திணைக்­கள அதி­கா­ரிகள், வன ஜீவ­ரா­சிகள் திணைக்­கள அதி­கா­ரிகள், காணி திணைக்­கள அதி­கா­ரிகள் ஆகி­யோரை சம்­பந்­தப்­பட்ட இடத்துக் அனுப்பி அங்­குள்ள பிரச்­சி­னை­களை நேர­டி­யாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கேட்­கப்­பட்­டி­ருந்­தது. அதற்­கி­ணங்­கவே இந்த செய­ல­மர்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இங்கு கருத்து தெரி­வித்த அதி­கா­ரிகள் கூறி­ய­தா­வது,
ஜனா­தி­பதி செய­லா­ளரின் பணிப்­பு­ரைக்­க­மையை இங்­குள்ள நிலை­மை­களை நேரில் கண்­ட­றிந்து, அதனை ஆராய்ந்த பின்னர் அறிக்கை சமர்ப்­பி­தற்­கா­கவே நாங்கள் இங்கு வந்­துள்ளோம்.

வில்­பத்து விவ­கா­ரத்தை ஆராய்­வ­தற்­காக முதற்­த­ட­வை­யாக இப்­ப­டி­யொரு குழு இங்கு வந்­துள்­ளது. பிரச்­சி­னைகள் காணப்­படும் பிர­தே­சங்­க­ளுக்கும் நாங்கள் நேர­டி­யாக சென்று இங்­குள்ள உண்மை நிைல­வ­ரங்­களை ஆராய்ந்து ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருக்கு அறிக்கை சமர்ப்­பிக்­க­வுள்ளோம். அதன்­பின்னர், ஜனா­தி­பதி செய­லா­ளரின் அறிக்­கையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் வழங்குவதாக கூறினார்கள்.

அதன்பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரச்சினைகளுக்குரிய இடங்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு உண்மை நிைலவரங்களை தெளிவுபடுத்தினார்கள். 

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், எம்.எச்.எம். சல்மான், மாகாணசபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம். நியாஸ், ஏ.எல். தவம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாறுக், முத்தலிப் பாவா பாறுக், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள், முசலி பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments