(வீடியோ).,கல்குடாவில் பல இடங்களுக்கும், பள்ளிவாயல்களுக்கும் நாபீர் பெளண்டேசன் விஜயம்….

(ihzana fareed)

அம்பாறை மாவட்டத்தில் சமூக சேவையினை மேற்கொண்டு வரும் நாபீர் பெளண்டேசன் கடந்த வாரம் கல்குடாவில் உள்ள பல இடங்களுக்கும், பள்ளிவாயல்களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டிருந்தது.

கல்குடா பிரதேசத்தில் சமூக ஆர்வலராகவும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சாட்டோ வை.எல்.மன்சூரின் அழைப்பின் பேரிலே நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் குறித்த விஜயத்தினை சினேகபூர்வமாக மேற்கொண்டு பெளண்டேசன் மூலமாக பல உதவிகளை அமைப்புக்கள் முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைவாக மிக விரைவில் மேற்கொள்வதற்காகன வாக்குறுதிகளையும், அதற்கான வழிமுறைகளையும் .வழங்கியிருந்தார்.

அந்த வகையிலே கல்குடா மாவடிச்சேனை ஜும்மா பள்ளிவாயலுக்கான விஜயத்தின் பொழுது பள்ளிவாயலுக்கு உடனடி தேவையாக உள்ள ஒலிபெருக்கி சாதனங்களை வருகின்ற ரமழான் முடிவடைவதற்கு முன்னர் வழங்குவதாக ஒப்புதல் அளித்த பெளண்டேசன் ஓட்டமாவடி பாரி பள்ளிவாயலுக்கு தேவையான காணியினை பெற்றுகொள்வதற்காக ஒரு தொகை பணத்தினையும் குறுகிய காலத்திற்குள் தருவதாக ஒப்புதல் அளித்தது.

அத்தோடு ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையான ஹிஜ்ரா வித்தியாலய நிருவாகத்தினரின் வேண்டுகோளான நாளாந்தம் இளம் மாணவ பிஞ்சுகள் இட நெருக்கடிக்குள் உள்ளாகி அவதிப்படுவதினால் அதனை நிவர்த்தி செய்ய தேவைப்படுக்கின்ற காணியினை கொள்வனவு செய்வதற்காக ஒரு தொகை பணத்தினை மிக விரைவில் தருவதற்கான ஒப்புதல் வாக்குறுதியோடு மாவடிச்சேனையில் உள்ள உயர்தர மாணவ அமைப்பொன்றிற்கு மென்பந்து கிரிக்கட் உபகர்ணங்களும் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

மேற்குறித்த நிகழ்வுகளில் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் கலந்து கொண்ட காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


Comments