துவரங்குள ஏழை மக்களுக்கு தனவந்தர்கள் உதவி
கிண்ணியா, துவரங்குளம் பகுதியில் வறுமையில் வாடி வந்த குடும்பம் ஒன்றின் நிலவரம் பற்றி அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல் பரவியதன் பின்னணியில் ஏழை கூலித் தொழிலாளி அஷ்ரப் (பிச்சைத் தம்பி சம்சுதீன்) பல உதவிகளைப் பெற்று வருவது மாத்திரமன்றி தற்போது அவர் போன்று கிண்ணியாவில் வறுமையில் வாடுவோருக்கும் அல்லாஹ்வின் பேரருளால் பல உதவிகள் கிடைக்க வழி பிறந்துள்ளது.
இதன் பின்னணியில், இன்றைய தினம் கொழும்பிலிருந்து வந்திருந்த கருணையுள்ளம் படைத்த சகோதரர்கள் பிரதேசத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கும் உதவ முன் வந்துள்ளனர்.
தகவலை கொண்டு சேர்க்க உதவியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு மேலும் உதவ மனம் படைத்தவர்கள் கிண்ணியா, மூதூர், புல்மோட்டை உட்பட பல பகுதிகளில் வறுமையால் வாடுவோருக்குத் தம்மாலான உதவிகளைச் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.



Comments
Post a Comment