அக்கரைப்பற்றில் கல்விச் சாதனையாளர்களுக்கு மாநகர சபையின் விருது.

Suhaib

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் வதியும் கல்வித் துறையில் சாதனை புரிந்த சாதனையாளர்களை 2017 ஆம் ஆண்டுக்கான அக்கரைப்பற்று மாநகர சபையின் நிகழ்ச்சித் திட்டங்களில்  கௌரவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2016 August மாதத்தில் G.C.E (A/L) பரீட்சைக்குத் தோற்றி மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும்.

மற்றும் 2016 - December மாதத்தில் G.C.E ( O/L) பரீட்சைக்குத் தோற்றி அனைத்துப் பாடங்களிலும் விசேட சித்திகளைப் பெற்ற ( All.  -  "A" ) மாணவர்களையும் கௌரவிப்பதற்கு அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் A.L.M.அஸ்மி அவர்களினால் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டின் கல்விச் சாதனையாளர்களை கௌரவிக்கும் மகத்தான நிகழ்வு முதன் முறையாக அக்கரைப்பற்று அதா உல்லா அரங்கில் 2017.04.18 ஆந் திகதி மாலை 4.00 மணி அளவில் இடம் பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Comments