அதாஉல்லாவை விமர்சிப்பதற்கு தவத்திற்கு எந்த அருகதையும் கிடையாது – ஏறாவூர் வஹாப்
(ஜஃபர்)
முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவpனால் வழங்கப்பட்ட அரசியல் அதிகாரத்தினூடாக தன்னையும் தனது பொருளாதாரத்தினையும் விருத்தி செய்துகொண்ட தவம் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை விமர்சிப்பதற்கு அருகதையற்றவர் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முன்னாள் ஏறாவூர் அமைப்பாளர் பீ.எம். வஹாப் தெரிவித்தார்.
அரசியல் அநாதையாகவிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவத்துக்கு அரசியல் விலாசம் கொடுத்து அரசியல் அதிகாரத்தை நுகரக்கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லாவாகும், அப்படியான ஒருவரை விமர்சிப்பதற்கு தவத்து எந்த அருகதையும் கிடையாது. தவத்தினுடைய விமர்சனத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை எனவும் வஹாப் மேலும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லாவை முகநூல்களிலும், இணையதளங்களிலும் செய்துவரும் கண்மூடித்தனமான விமர்சனம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அக்கரைப்பற்றில் அநாதையாக இருந்த தவத்துக்கு அரசியல் அதிகாரத்தை நுகரக்கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா என்பதனை தவம் மறந்து பேசினாலும், இந்த நாட்டில் வாழும் எந்தவொரு மகனும் மறந்துவிட முடியாது. அப்படியான ஒரு தலைவனை தவம் இன்று முகநூலிலும், இணையதளங்களிலும் அநாகரிகமாக விமர்சிப்பது வேடிக்கையான விடயமாகும்.
கடந்த காலங்களில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுடன் நகமும் சதையுமாக இருந்து செயற்பட்ட தவம் அதாஉல்லாவினால் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டார். அப்போது அப்பதவியிலிருந்து பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் முன்னேற்றமடைந்த தவம் பிற்காலத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலிலும் போட்டியிட்டு மேயர் பதிவியினையும் குறி வைத்தார்.
தவத்தினுடைய கடந்தகால செயற்பாடுகளில் திருப்தியடையாத முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவருக்கு அந்த மேயர் பதவியை வழங்குவதற்கு முன்வரவில்லை. இதனாலே தவம் அதாஉல்லாவோடு முரண்பட்டார் என்பது யாவரும் அறிந்தவிடயமாகும். அதாஉல்லாவோடு முரண்பட்ட தவம் பல கட்சியுடனும் இணைவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இறுதியில் அவருக்கு மு.காவில் இணையக்கூடிய சந்தர்ப்பமே கிட்டியது. தவத்தினுடைய முரண்பாடு நேர்மையாக இருந்திருந்தால் அக்கரைப்பற்று மக்கள் தவத்தின் பின்னால் சென்றிருக்க வேண்டும். தவத்தினது பிரிவு தனிப்பட்டதும், சுயநலமிக்கதுமே என்பதனை கடந்த தேர்தலின் மூலம் அக்கரைப்பற்று மக்கள் வெளிக்காட்டியிருந்தனர்.
தான் கற்றவன் என தன்னைத்தானே உயர்த்திப் பேசும் தவம் சமூக வலயத்தளங்களில் அநாகரிகமாகவும், கீழ்த்தரமாகவும் மூத்த அரசியல்வாதிகளை விமர்சித்து எழுதுவதனை அவதானிக்கக் கிடைத்தது. கடந்தகாலங்களில் முன்னாள் அமைச்சர்களான அதாஉல்லா மற்றும் சேகு இஸ்ஸதீன் ஆகியோரை புகழ்ந்து பேசிய தவம் இன்று அவர்களை எதிர்த்து வசை பாடுவது சுயநல அரசியலுக்காகவேயன்றி வேறு ஒன்றுமில்லை. அக்கரைப்பற்று மண் இன்று உலகலாவிய ரீதியில் பேசப்படுவதற்கு அதாஉல்லவும் ஒருத்தன் என்பதனை அக்கரைப்பற்று மக்கள் ஒருபோதும் மறந்துவிடவும் முடியாது.
தவத்தினுடைய அநாகரிகமானதும், போலியானதுமான விமர்சனங்கள் தொடர்பில் அம்பாரை மாவட்ட மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது காலத்தின் தேவயைாகும். தனது அரசியல் இருப்பு பற்றி சந்தேகத்துடன் உலாவும் தவம் ஒரு சில மாதங்களில் நடைபெறப் போகும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அக்கரைப்பற்றில் ஒருபோதும் தனக்கு ஆதரவு கிடைக்காது என்பதனால் அம்பாரை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் வாக்குகளை இலக்கு வைத்தே இப்போது முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது தவம் வெற்றி பெற்றாலும் அக்கரைப்பற்றில் குறிப்பிட்டளவு வாக்குகளே அவருக்குக் கிடைத்தது. அதிகமான வாக்குகள் அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்தே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. அதனாலே அவர் வெற்றிபெற்று கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார். தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்த வேண்டிய தவம் இன்று அம்மக்களை மறந்து செயற்படுவதாக அம்பாரை மாவட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக தனக்கு கிடைத்த அதிகாரத்தினூடாக தவம் எந்தவொரு பணிகளையுமே அக்கரைப்பற்றிலோ அல்லது அம்பாரை மாவட்டத்தில் அவருக்கு வாக்கு கிடைத்த பகுதிகளிலோ செய்யவில்லை குறைந்தது அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகளையாவது சரியாக பங்கீடு செய்யவில்லை என்ற ஏமாற்றமும் பெரும் குறையும் அம்மக்கள் மத்தியில் உள்ளதனை அவதானிக்க முடிகிறது. தவத்தினால் பாரிய அபிவிருத்திப் பணிகளை செய்ய முடியாவிட்டாலும் அவர் சார்ந்த கட்சியின் தலைவராலயோ அல்லது ஏனையவர்களாலயோ செய்ய முடியவில்லை என்பதும் பெரும் குறையாகவே காணப்படுகிறது.
மு.கா கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ள தவம் கடந்தகாலங்களில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவோடு நெருக்கமாக இருந்த காலப்பகுதியில் மு.காவுக்கு எதிராக அம்பாரை மாவட்டத்தில் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். மு.கா தலைவர் அக்கரைப்பற்றுக்கு நோன்பு திறக்கச் சென்ற போது கூட அவரின் வருகையை தடுப்பதில் தவமும் முக்கிய பாத்திரத்தை வகித்தவராவார். இவைகளை ஹக்கீம் மறந்திருக்கக் கூடும் என தவம் நினைப்பது பெரும் முட்டாள்தனமாகும். குறிப்பாக தவம் அதாஉல்லாவைப் பற்றி இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி கொக்கரித்தாலும் தவம் நினைப்பதை சீக்கிரமாக மு.காவில் அடைந்துகொள்ள முடியாது. என்பது தவத்துக்கு தெரியாமலிருக்கலாம். காரணம் அவர் மு.காவுக்கு எதிராக கடுமையாக செயற்பட்டவராவார்.
எதிர்வரும் தேர்தலில் தனக்கு அக்கரைப்பற்றில் ஆதரவு கிடைக்காது என்பதனை உணர்ந்துகொண்ட தவம் இன்று தனது இயலாமையினை மூடி மறைத்து எப்படியாவது அதாஉல்லாவை விமர்சித்தாவது அக்கரைப்பற்று தவிர்ந்த அம்பாரை மாவட்டத்தின் ஏனைய பகுதி மக்களின் வாக்குகளை சூறையாடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார். அவ்வாறு அவர் நினைத்துக் கொண்டிருப்பது வெறும் பகல் கனவாகும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரபின் பாசறையில் வளர்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தனக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தினூடாக பல அமைச்சுக்களைப் பெற்று அதனூடாக கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்ட ஒரு சிறந்த அரசியல் தலைவராவார். அதாஉல்லாவின் இழப்பு முழுக்கிழக்கு மாகாணத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அந்த ஏக்கத்தில் இருந்து இன்னும் அக்கரைப்பற்று மக்கள் மீளவில்லை. இன்று அதாஉல்லாவின் தேவை கிழக்கு மாகாண மக்களிடத்தில் உணரப்பட்டுள்ளது என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு சார்பாக செயற்பட்டார் என்பதற்காக கடந்த பொதுத் தேர்தலின் போது தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தற்போது ஓய்வில் இருக்கும் சமயத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் ஏன் விமர்சிக்கத் தொடங்கியள்ளார். என்று பார்த்தால் அதன் பின்னனியில் கிழக்கு மாகாண சபை தேர்தல் இருப்பதுதான் உண்மையாகும்.
அரசியல் ரீதியான விமர்சனங்கள் என்பது சர்வசாதரணமானது அதனை நாகரிகமாகவும், உண்மைத்தன்மையுடனும் வெளிப்படுத்துவதனையே மக்களும் ஏற்றுக்கொள்வர். மாறாக சோடிக்கப்பட்ட விடயங்களை அநாகரிகமாக விமர்சிப்பதானது தவத்தின் அரசியல் வங்குரோத்து நிலையாகும் எனவே பல கல்விமான்களையும், புத்திஜீவிகளையும் கொண்ட அக்கரைப்பற்று மக்கள் இவ்வாறான வங்குரோத்து அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் வஹாப் மேலும் தெரிவித்தார்.

Comments
Post a Comment