மூதூர்: கிணறுகளை மூட நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு
மூதூர் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப் படுத்தும் வகையில் கிணறுகளை மூடுவதற்கென மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நுளம்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளன.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஐக்கிய தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் வை. ஜெஸ்மினிடம் நேற்று சனிக்கிழமை(22) இந்நுளம்பு வலைகள் கையளிக்கப்பட்டன.


Comments
Post a Comment