வீடியோ).,நாபீர் பெளண்டேசனின் வருகை இல்லாமலும் திட்டமிட்டபடி வெற்றியுடன் இடம்பெற்ற சவூவி நிகழ்வு..

(ihzana fareed)

அன்மையில் சமூக சேவைகள் நிறுவனமான நபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் சவூதி அராபியாவின் ஜித்தா நகரில் உள்ள பெளண்டேசனின் ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க சவூதிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ள இருந்தார் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் உதுமான்கண்டு நாபீர்.

இதனை அறிந்த சவூதியில் வாழ்கின்ற 200க்கும் அதிகமான நாபீர் பெளண்டேசனின் ஆதரவாளர்கள் தலைவரின் வருககையை முன்னிட்டு ஒன்று கூடியிருந்தனர். குறித்த ஒன்று கூடலானது நசார் மெளலவியின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தவிக்க முடியாத காரணத்தினாலும், இலங்கையில் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருந்ததினாலும் குறித்த சவூதிக்கான நிகழ்வில் நாபிர் பெளண்டேசனின் தலைமையினால் கலந்துகொள்ள முடியவில்லை.

இது சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த பெளண்டேசன்.. குறித்த நிகழ்வில் பெளண்டேசன் கலந்துகொள்ள விடத்தும் 200க்கும் அதிகமான பெளண்டேசனின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு குறித்த நிகழ்வினை நசார் மெளலவியின் தலைமையில் நடாத்தியிருந்தமை பெளண்டேசனுக்கு கிடைத்த வெற்றியாகவும், கடல் கடந்து மக்கள் பெளண்டேசன் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் எடுத்துக்காட்டுகின்றது. 

குறித்த நிகழ்வில் துரதிஸ்ட்டவசமாக கலந்துகொள்ள முடியாமையிட்டு தனது வருத்தத்தினை தெரிவிக்கும் பெளண்டேசனின் தலைமை., பெளண்டேசனின் சார்பில் அத்தீக், நாசர்,ஹசன் போன்ற முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு குறித்த நிகழ்வு சிறப்பாக இடம் பெற தங்களாலான ஒத்துளைப்புக்களை வழங்கியிருந்தமைக்கு தனது நன்றியினை தெரிவிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கின்றது..

Comments