மைத்திரியின் வர்த்தமானியை எதிர்த்து முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் வழக்குத் தாக்கல்?
வில்பத்து சரணாலயத்திற்கு வடக்கே முசலிப் பிரதேச மக்களின் பூர்வீகக் காணிகளை உள்ளடக்கி அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானியை எதிர்த்து முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளது.
முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டம் அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பூர்வீகமாக வாழ்ந்துவந்த மக்களது அடிப்படை உரிமைகள் இதில் மீறப்பட்டிருப்பதாக முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளை உள்ளடக்கிய குழு இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


Comments
Post a Comment