சுதந்­திர கட்­சியின் தீர்­மா­னத்தை மீறினால் கடும் நட­வ­டிக்கை


மஹிந்­த­வுக்கும் அதேகதி என்­கிறார் துமிந்த
ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மே தினக் கூட்­டத்தில் கட்­சியின் அங்­கத்­த­வர்கள் அனை­வரும் கலந்­து­கொள்ள வேண்டும். கட்­சியின் தீர்­மா­னத்தை மீறும் நபர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். 

மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இந்த நிய­தியே என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் துமிந்த திச­நா­யக்க தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிரிக்கும் நகர்­வு­களை மஹிந்த ராஜபக் ஷவே மேற்­கொண்டு வரு­கின்றார் எனவும் குறிப்­பிட்டார்.  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் துமிந்த திசா­நா­யக மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 
இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கட்­சியின் மே தினக் கூட்­டத்தை நடத்த கட்சி அனைத்து விதத்­திலும் தயா­ரா­கி­யுள்­ளது.  கண்­டிக்கு செல்லும் சகல வீதி­க­ளிலும் கட்­சியின் பேரணி வந்து பிர­தான இரண்டு பேர­ணி­யுடன் இணைந்து பிற்­பகல் இரண்டு மணிக்கு கண்டி கெட்­டம்பே மைதா­னத்தில் மே தின கூட்டம் இடம்­பெறும். உழைக்கும் மக்­களின் உரி­மை­களை வென்­று­கொ­டுத்த பங்கு எமக்கே உள்­ளது. மக்­களின் நிலை­மை­களை உணர்ந்து தொழி­லாளர் நல­னுக்­காக செயற்­படும் கட்­சி­யாகும்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அர­சாங்­கத்தில் அதி­க­ளவில் தொழி­லாளர் நலன்கள் பெற்­றுக்­கொ­டுக்க முடிந்­துள்­ளது. உண்­மை­யான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மே தின கூட்டம் கண்­டியில் தான் உள்­ளது. கொழும்பில் காலி முகத்­தி­டலில் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எனக் கூறிக்­கொண்டு செயற்­ப­டு­வதால் அது எமது கூட்டமாகிவி­டாது. 

கடந்த முறையை விடவும் அதி­க­ளவில் மக்­களை இணைத்து எமது சாத­னையை நாமே முறி­ய­டித்து எமது பலத்தை காட்­டுவோம். 
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைத்து செயற்­படும் 20 க்கும் அதி­க­மான கட்­சிகள் இம்­முறை எம்­மோடு  இணைத்­து­கொள்­ள­வுள்­ளன. அதேபோல் அரச, தனியார் பேருந்­துகள் உரிய பணம் செலுத்தி கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன. இப்­போது வரையில் 2000ஆயிரம் அரச பேருந்­துகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எமது பலத்தை வெளிப்­ப­டுத்தும் மே தினத்தை நாம் இம்­முறை செய்து காட்­டுவோம். அதற்காக யாரையும் பழி­வாங்கும் வகையில் நாம் எதையும் மேற்­கொள்ள மாட்டோம்.

அனை­வ­ரதும் சுதந்திரத்துடன் நாமும் இணைந்து செயற்­ப­டவே விரும்­பு­கின்றோம். ஆகவே எமது பக்கம் சரி­யான நகர்­வுகள் உள்­ளன. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அனை­வ­ருக்கும் ஒரே கட்சி சட்டம் செயற்­படும். மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேறு சட்­டமும் ஏனை­ய­வர்­க­ளுக்கு வெறும் சட்­டமும் என செயற்­ப­டுத்த முடி­யாது.

 ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் இந்த மே தின கூட்டம் தொடர்பில் கலந்­து­கொள்ள வேண்டும் என எழுத்­து­மூலம் அறி­வித்­துள்ளோம். அதேபோல் கலந்­து­கொள்­ளாது நிரா­க­ரிக்கும் நபர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும். கட்சியின் கொள்கையை மீறி செயற்படும் நபர்களுக்கு கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்றார். 

Comments