அநாதையாகி விட்டதா கிண்ணியா மத்திய கல்லூரி?


கிண்ணியாவின் பழைமைவாய்ந்த தேசிய பாடசாலை கிண்ணியா மத்திய கல்லூரி  ஆகும். வரலாறு காணாத பல்வேறு புத்திஜீவிகளை அன்று தொடக்கம் இன்று வரை உருவாக்கியுள்ளது. பல காலங்களாக பலமாதங்களாக நிரந்தர அதிபர் இன்மை காரணமாக இப்பாடசாலை அநாதையாகிவிட்டது.

கடல் கடந்த பல புத்திஜீவிகள் உள்நாட்டு கல்விமாணிகள் வைத்தியர்கள் சட்டத்தரணிகள் அரசியல்வாதிகள் என பல பட்டங்களை பெற்றெடுத்த பாடசாலை இதுவே. எனினும் இன்றைய நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகள் எடுத்துவருவதாக தெரியவில்லை .குறிப்பாக கிண்ணியாவில் இருக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயரளவில் மாத்திரம் தான் செயற்படுகின்றார்களா என கேள்வி எழுகின்றது.

அண்மையில் கல்வி அமைச்சில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கொண்டு சென்று கலந்துரையாடியதன் பலன்  என்னவென்று இதுவரைக்கும் தெரியவில்லை.

இவ் விடயம் தொடர்பாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம் முன்னின்று நடவடிக்கைகளை துரிதப்படுத்தி நிரந்தர தரமுள்ள அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் கிண்ணியா மத்தியகல்லூரியில் நிர்வாகம் உட்பட பல குறைகள் அதிகரிப்பதை தடுக்க முடியாது போய்விடும்.

Comments