தண்ணீர் தாங்கியில் ஏறிய ‘மருத்துவர்கள்’ கைது!


கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தண்ணீர் தாங்கியில் ஏற முனைந்த இரு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சில வாரங்களில் திருமண பந்தத்தில் இணையவுள்ள ஆண் – பெண் மருத்துவர்களே இவ்வாறு தண்ணீர் தாங்கியில் இரவு வேளையில் ஏறியுள்ள நிலையில் பாதுகாப்பு ஊழியர்களின் தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிசார் இருவரையும் கைது செய்து பின் பிணையில் விடுவித்துள்ளனர்.

ஏற வேண்டும் போல் இருந்ததால் ஏறியதாக பொலிஸ் நிலையத்தில் குறித்த மருத்துவர்கள் வாக்குமூலமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments