கருமலையூற்று பள்ளிவாசலை மக்கள் பாவனைக்கு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை; தௌபீக் எம்பியிடம் பாதுகாப்பு தரப்பினர்

Abdul Fareed

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசத்திலுள்ள கருமலையூற்று கிராமத்தில் பள்ளிவாசல் அமைந்துள்ள பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருப்பதால், அங்கு வெளியார் செல்வதற்கு 2009ம் ஆண்டு தொடக்கம் தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் தொழுகையும் தடைப்பட்டுள்ளது.

1926ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசல், 1947ம் ஆண்டு ஜும்மா பள்ளி வாசலாக பதிவு செய்யப்பட்டு, அந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அடையாளமிடப்படும் வரை முஸ்லிம்கள்  வழமையான தொழுகைகளும் அங்கு இடம்பெற்று வந்தன.

படையினர் வசம் உள்ள இப்பள்ளிவாசலை மீண்டும் மக்கள் பாவனைக்கு  வழங்கும் பொருட்டு இன்று (24) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது திருகோணமலை கட்டளைத்தளபதி, மேலதிக அரசாங்க அதிபர், மாகாண காணி ஆணையாளர், பட்டினமும் சூழலும் பிரதேச செயலார், CCD Officer, Lt Col விஜேசேகர, முன்னாள் பிரதேச சபைஉப்பினர் பசீர் மற்றும் கருமலையூற்று பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபியினரும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சுடன்  எதிர்வரும் வெள்ளிகிழமை  இடம்பெறவுள்ள  கலந்துரையாடளின்போது  இப்பள்ளிவாசலை மக்கள் பாவனைக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும். அதேவேளை இந்த காணியை விடுவிப்பதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதை உறுதியாக பாதுகாப்பு அமைச்சுக்கு இதன்போது அறிவிக்கவுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் இதன்போது பாராளுமன்ற உறுப்பினருடன் ஆளுநர் முன்னிலையில்  உறுதியளித்தார்கள்.

Comments