இவர்கள் மகா கெட்டவர்கள்


மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சொத்துகளைத் திருடுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் 23 பேரைக் கைதுசெய்துள்ளதாக,  மீதொடமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். 

இந் நடவடிக்கையினால், குறித்த பிரதேசத்தில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் முகமாக,  இரவு நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க, விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு, கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments