வில்பத்து பிரகடன விவகாரம் எம்.பி.க்கள்-சிவில் சமூகம் ஒருமித்து பணியாற்றுவர்

தேசிய ஷீரா சபை நடத்திய விசேட கூட்டத்தில் இணக்கம்


வட மகாண முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற உரி­மை­களை உறு­தி­செய்­வதில் அனைத்து அர­சியல் மற்றும் சிவில் அமைப்­புக்­களும் ஒரு­மித்துப் பணி­யாற்­று­வது என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆலோ­சனை மன்றத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தேசிய ஷூறா சபையின் ஏற்­பாட்டில் கொழும்பில் நேற்­று­முன்­தினம் இரவு இடம்­பெற்ற விஷேட கூட்­டத்­தின்­போதே இவ்­வாறு இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.



மேலும் தேசிய ஷூரா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உட்­பட  அனைத்து அர­சியல் கட்சி முஸ்லிம் தலை­மை­க­ளையும் சிவில் சமூக அமைப்­பு­க­ளையும் ஒன்றிணைத்து வழிநடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மானங்களாவன.2009 ஆம் ஆண்டு உள்­நாட்டு யுத்தம் முடி­வுற்­றதைத் தொடர்ந்து அரச தரப்பின் சில சக்­திகள் திட்­ட­மிட்­ட­வ­கையில் இலங்கை முஸ்­லிம்கள் மீதான தொடர்­தாக்­கு­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. இவர்கள் தென் பகுதி முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார, சமய மற்றும் அர­சியல் உரி­மை­க­ளையும், வட­கி­ழக்கு வாழ் முஸ்­லிம்­களின் வாழி­டங்­க­ளையும், மீள் குடி­யேற்ற உரி­மை­க­ளையும் குறி­வைத்துத் தாக்கி வரு­கின்­றனர்.

LTTE தீவி­ர­வா­தத்­துக்கு துணை­போ­க­வில்லை என்ற பின்­ன­ணியில் 48 மணி­நேர அவ­கா­சத்தில் தமது தாய்­மண்­ணி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களை “தேசப் பற்­றாளர்” விரு­து­வ­ழங்கி அனைத்து வச­தி­க­ளு­டனும் கௌர­வ­மான முறையில் குடி­யேற்றக் கட­மைப்­பட்­டுள்ள அரசு இன்று இன­வாதச் சக்­தி­களின் சதி­வ­லையில் சிக்கி அந்த மக்­களை திறந்த வெளிச் சிறைக்­கை­தி­க­ளாக மாற்­றி­யுள்­ளதை 24.03.2017 அன்று வெளி­வந்த வர்த்த­மானி அறி­வித்தல் உறு­தி­செய்­கின்­றது.  

பல நூறு வரு­டங்­க­ளாக விவ­சாயம், மந்­தை­மேய்ப்பு மற்றும் குடி­யி­ருப்பு எனும் வேறு­பட்ட மானிட நட­வ­டிக்­கை­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட முசலி பிர­தேச காணிகள் 2012 ஆம் ஆண்டு அரச வர்த்­த­மா­னி­யுடன் ஒதுக்­கீட்டு வன­மா­கவும், இன்று பாது­காக்­கப்­பட்ட வன­மா­கவும் பிர­க­ட­னப்­பட்­டுள்­ளது.  முறை­யான ஆய்­வு­களோ, மக்கள் கருத்­த­றி­தல்­களோ இன்றி மேற்­கொள்­ளப்­பட்ட இந்த எல்லை நிர்ணயம் முசலி பிர­தேச செய­லகப் பிரி­வுக்கு உட்­பட்ட 82% நிலங்­களை அப­க­ரித்­துள்­ள­துடன், பிர­தேச  மக்­களை சூழ­லியல் அக­தி­க­ளாக வாழ நிர்ப்­பந்­தித்­துள்­ளது.

இன்று முசலி மக்கள் எதிர்­கொண்­டுள்ள இந்த நிலைமை நாட்டில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் திட்­ட­மி­டப்­பட்ட நட­வ­டிக்­கை­களின் ஒரு வெளிப்­பாடு என்­பது புலப்­ப­டு­கின்­றது.  இந்­தப்­பின்­ன­ணியில்,  05.04.2017 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், துறை சார் நிபு­ணர்கள், சட்­டத்­த­ர­ணிகள், மற்றும் தேசிய முஸ்லிம் அமைப்­புக்­களின் தலை­வர்கள் மற்றும் பல முக்­கிய பிர­தி­நி­தி­களின் பங்­கேற்­புடன் கடந்த 05ஆம் திகதி கொழும்பில் ஒன்­று­கூடிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை மன்றத்தின் 3ஆம் அமர்வில் பின்­வரும் விட­யங்கள் உள்­ளிட்ட பல முக்­கிய விட­யங்கள் கலந்து­ரை­யா­டப்­பட்­டன.

 முசலி நில ஆக்­கி­ர­மிப்­பா­னது பிழை­யான எடு­கோள்­களின் அடிப்­ப­டையில் ஒரு சிறு­பான்மை சமூ­கத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள ஒரு அடிப்­படை உரிமை மீற­லாகும். எனவே இதற்­கான நியா­ய­மா­னதும், நிலை­யா­ன­து­மான தீர்வை அடை­வதில் அனைத்து இன, மத, அர­சியல் தலை­மை­க­ளையும் ஒன்­றி­ணைத்த பல மட்­டங்­க­ளி­லு­மான  பரந்­து­பட்ட முன்­னெ­டுப்­புக்­களை எடுத்தல்.

 முசலி மக்கள் எதிர்­கொண்­டுள்ள சவால்கள் பற்றி நாட­ளா­விய மட்­டத்தில் பல மட்­டங்­க­ளிலும் பொது மக்­க­ளையும், உரிய தரப்­பி­ன­ரையும் அறி­வூட்­டு­வ­துடன், அவர்­க­ளது  பூர்­வீக நில உரி­மை­களை உறு­தி­செய்­வ­தற்­கான அனைத்து முயற்­சி­க­ளையும் எடுத்தல்.
· 2012 மற்றும் 2017 ஆம் ஆண்­டு­களில் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தல்­களை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட தேசிய அரசின் அனைத்து அர­சியல் தலை­மை­க­ளையும் வலி­யு­றுத்­து­வ­துடன், நியாய­மான மாற்று வழி­க­ளையும் பரிந்­து­ரைத்தல்.

தேசிய ஷூரா சபையின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உப குழு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான இந்த தொடர்ச்­சி­யான அமர்­வு­களை  ஏற்­பா­டு­செய்­து­வ­ரு­கின்­றது. இந்த அமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அலி ஸாஹிர் மௌலானா, எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்­பாக அதன் தலைவர் அமைச்சர் றிஷாத் பதி­யுதீன், பிரதி அமைச்சர் அமீர் அலி, எம்.எச்.எம். நவவி, இஷாக் அஹமட் ஆகியோரும் ஐக்­கிய தேசியக் கட்சி சார்­பாக முஜிர் ரஹ்மான், ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி சார்­பாக பிரதி அமைச்சர் ஹிஸ்­புல்லா ஆகியோரும் பங்கேற்று ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் முஸ்லிம்களின் மீள் குடியேற்ற உரிமைகள் எவ்வாறு மறுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய பேராசியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ், அதனை சட்டரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் விளக்கினர். அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக தேசிய முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், துறைசார்ந்த நிபுணர்களும் கருத்துரைத்தனர்.

Comments