சம்மாந்துறையில் தார் வீதியாக்கப்பட்ட வீதிகள் திறந்து வைப்பு
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
அம்பாறை 10ஆம்வீதி, அம்பாறை 12ஆம் வீதி, ஹிஜ்ரா 2ஆம்வீதி, மதீனா உம்மா மற்றும் முகைதீன் மாவத்தை குறுக்கு வீதி, மல் 6ஆம் வீதி, அல் ஹம்றா வீதி ஆகியவை தார் இட்டு புனரமைக்கப்பட்டு மக்கள் பாவணைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன், மல் 15ஆம் வீதி, அல் அர்சத் வடக்கு வீதி தார் இட்டு புனரமைக்கும் ஆரம்பிக்கும் நிகழ்வும் மற்றும் சம்மாந்துறை சபூர் பள்ளிவாசலின் அருகாமையிலுள்ள பாலத்தை மக்கள் பாவணைக்கு திறந்து திறந்தும் வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம்.மாஹீர், ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ.காதிர், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல்.சலீம், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.முஸ்தபா, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.




Comments
Post a Comment