விமலுக்கு ஒரு நீதி; தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதி: மனோ


உண்ணாவிரத போராட்டம் நடாத்தி விமல் வீரவன்சவால் விடுதலை பெற முடியுமாக இருந்தால் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

உண்ணாரவிரத போராட்டத்தின் பின் விமல் வீரவன்சவின் பிணை மனுவுக்கு சட்டமா அதிபர் தரப்பிலிருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை. அதே போன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அதே நீதி வழங்கப்பட்டு அவர்களுக்கும் சாதாரண சமூக வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments