முஸ்லிம் சமய விவகார அமைச்சின் விதந்துரை கடிதம் வேண்டும்
தம்புள்ளை பள்ளிவாசல் நிருவாகத்திடம் நகர அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை
நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளை பள்ளிவாசலுக்கு மாற்றுக் காணி வழங்குவதற்காக முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சின் விதந்துரை கடிதமொன்றினை பெற்றுத் தருமாறு தம்புள்ளை பள்ளிவாசல் நிர்வாக சபையின் உதவிச் செயலாளர் எஸ்.எச்.எம்.ரவூப் தெரிவித்தார்.
இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறினார்.
அமைச்சின் விதந்துரை கடிதம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அனுப்பி வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் அமைச்சரின் செயலாளர் எம்.எச். எம். பாஹிமிடம் வினவியபோது, பள்ளிவாசல் மற்றும் வக்பு சொத்துகளை வக்பு சபையே நிர்வகித்து வருவதாகவும் குறிப்பிட்ட விதந்துரை கடிதத்தை வக்பு சபை விரைவில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
தம்புள்ளை ஹைரியா ஜும் ஆ பள்ளிவாசல் விவகாரம் 2012 ஆம் ஆண்டிலிருந்து தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Comments
Post a Comment