மே தின கொண்டாட்டமோ, ஊர்வலத்தையோ நடத்த போவதில்லை - ஹக்கீம்
மே தினத்தை முன்னிட்டு தமது கட்சி கொண்டாட்டமோ, ஊர்வலத்தையோ நடத்த போவதில்லை என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். அத்துடன், தமக்கு அழைப்பு விடுக்கும் கட்சியின் மே தின ஊர்வலத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை பிரதிநிதிதுவப்படுத்தும் கட்டியின் மே தின ஊர்வலத்தில் மாத்திரமே இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


Comments
Post a Comment