தம்பலகாமம் அரபா நகர் ஊடாகச் செல்லும் தாயிப் நகர் வீதி புனரமைப்பில் தில்லுமுல்லா! பிரதேச மக்கள் விசனம் தம்பலகாம பிரதேச செயலாளரே இது உங்களின் கவனத்துக்கு
தகவல்:- பிரதேசவாசிகள்
தம்பலகாமம் மீரா நகர்228H கிராம பிரிவுக்குற்பட்ட அரபா நகர் ஊடாகச் செல்லும் தாயிப் நகர் வீதி புனரமைப்பில் ஒப்பந்தகாரர்கள் தில்லுமுல்லா!
பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பு
அரபா நகர் தொடக்கம் தாயிப் நகருக்கு உட்பட்ட மையவாடிக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதி பலவருடங்களாக புனரமைக்காமல் காணப்பட்ட போதிலும் அன்மைய குறுகிய காலங்களில் புனரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று முடிந்தது இப்புனரமைப்பு பணிகள் சீராக இடம்பெறவில்லை எனவும் மக்களின் பணத்தை வீன் விரயம் செய்வதாகவும் குறித்த புனரமைப்பு பணிகளில் ஒப்பந்தகாரர்கள் சரியான முறையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதன் அடிப்படையில் எமது செய்தி பிரிவினர் எமது கண்ணோட்டத்தை அவ்வீதியின் மீது இட்டனர் இப் பாதையில் பயணிக்கும் போது மழைவீழ்ச்சி காலங்களில் அதிகளவான நீர் தங்குவதால் அதற்கு தகுந்தவாறு புனரமைப்பு பணிகள் இடம்பெறவில்லையெனவும் பாரிய அளவிலான வெடிப்பு காணப்படுவதாகவும் கனரக வாகனம் பாதையில் பயணிக்கும் பட்சத்தில் இடிந்து விழும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர் .
சரியான முறையில் செப்பனிட ஒப்பந்தக்காரர்கள் தவறியதாக மக்கள் விமர்சிக்கின்றனர் மக்களின் வரி பணத்தில் அமைக்கப்படும் இவ்வீதியை சரியான முறைப்படி அமைக்காத பட்சத்தில் சிறிய காலத்தில் இவ்வீதி மீண்டும் புனரமைக்க வேண்டி ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன எனவே இதன் செலவானது மக்களின் வரி பணத்திலேயே மேற்கொள்வதால் மக்கள் மீது பாரிய அழுத்தத்தினை தம்பலகாம பிரதேச செயலகம் சுமத்தப்போகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
ஒப்பந்த காரருக்கு வீதி புனரைப்பு பணியை வழங்கியிருப்பினும் அதனை மேற்பார்வை செய்யும் முழுப்பொறுப்பும் தம்பலகாம பிரதேச செயலக பொறியியலாளர் தொழில்நுட்ப அதிகாரிகளையே சாரும் எனவே தம்பலகாம பிரதேச செயலாளர் இதனைக் கூடிய கருத்தில் கொண்டு மக்களின் வரி பணத்தை வீன் விரயமாக்காது மக்களிற்கு தகுந்த சேவையினை வழங்கவேண்டும் என்று இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Comments
Post a Comment