டெங்கு நோயாளர்களுக்கு தனியான சிகிச்சைப் பிரிவு

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க மேல், தென் மற்றும் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் தனியான சிகிச்சைப் பிரிவொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது சுகாதார அமைச்சு.

இதன் மூலம் டெங்கு நோயாளர்களுக்கான உடனடி சிகிச்சை வழங்கப்படுகின்ற அதேவேளை தற்போது ஏழு மாவட்டங்களில் டெங்கு தீவிரமாகப் பரவியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராபிட்டிய, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, மாத்தறை வைத்தியசாலைகளில் இம்மாதம் 20ம் திகதிக்கு முன்பதாக இவ்வாறு தனிப்பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments