(வீடியொ).,அஸ்ஸஹீட் தாவூத் & புஹாரி ஞாபகார்த்த கிழக்கின் உதைப்பந்தாட்ட ஆரம்ப நிகழ்வில் கிழக்கின் தலைமை ஹாபிஸ் நசீர்…


-ihzana fareed

ஓட்டமாவடி பிரதேசத்திற்கு இருக்கின்றது.
அதே போன்று ஏறாவூரின் கல்விமானாகவும், அலிகார் தேசிய பாடசாலையின் அதிபராகவும், ஏறாவூர் பிரதேசத்தில் வாழ்ந்த தன்மானமிக்க ஒரு இரும்பு மனிதனாகவும் காணப்பட்ட அஷ்ஷஹீட் தாவூத் மாஸ்ட்டர் எனப்படும் அதிபர் 1990ம் புஹாரி விதானையை போன்றே விடுதலை புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஜனாஸா உறவினர்களிடத்தில் கையளிக்கப்படாத சோக வரலாறு ஏறாவூர் பிரதேசத்திற்கும் இருக்கின்றது. இது மன்னிக்கபட வேண்டிய விடயம் என்பதில் மாற்று கருத்தில்லை என்பதில் மனிதன் என்ற வகையில் சர்வசாதாரணம். ஆனால் அது ஒரு அழிக்க பட முடியாத வரலாறு என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இவர்கள் இருவர்களினதும் நினைவாக ஏறாவூர் பிரதேசத்தில் நான்கரை தசாப்த காலமாக விளையாட்டு துறையில் மட்டு மல்லாது கல்வி, கலை கலாச்சரம், சமூக சேவை, அரசியல் என பல துறைகளிலும் தாக்கம் செலுத்தும் இளம் தாரகை விளையாட்டு கழகமானது (YSSC Young Strar Sports Club) கிழக்கு மாகாணம் தழுவிய அஷ்ஷஹீட் புஹாரி விதானையார் & தாவூத் மாஸ்ட்டர் மாபெரும் உதைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டியின் அறிமுக நிகழ்வானது இன்று 11.04.2017 செவ்வாய் கிழமை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் வரலாற்று பதிவாக இடம் பெற்றமை YSSC கழகத்தின் வரலாற்றில் மைல்கல்லாகும். 

கிழக்கு மாகாணத்தின் வரலாற்றில் என்றும் இல்லாத சாதனையாகவும், வரலாற்று பதிவாகவும் இடம் பெற உள்ள இச் சுற்றுப்போட்டியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள முக்கிய 32 விளையாட்டு கழகங்கள் பலப்பரீட்ச்சையில் பங்குபற்ற உள்ளன. அத்தோடு வெற்றியீட்டும் கழகங்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட உள்ளதுடன் அவைகளுக்கான போட்டிகளின் நிகழ்ச்சி நிரலும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. அத்தோடு அஸ்ஸஹீட் தாவுத் & புஹாரி குடும்பத்திலிருந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களான மேஜர் அஹ்மட் மற்றும் ஊடகவியலாளர் ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் சவால் & வேற்றி கிண்ணங்களை உத்தியோகபூர்வாமாக ஏறாவூர் இளம் தாரகை விளையாட்டு கழகத்திடம் கையளித்தமை நிகழ்வின் முக்கிய அமசமாகும். 
வரலாறு படைக்கவிருக்கும் அஷ்ஷஹீட் & தாவூத் மாஸ்ட்டர் & புஹாரி விதானையார் மாபெரும் உதைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டிக்கான பூரண அனுசரணையினை ஓட்டமாவடியில் உள்ள சமூக ஆர்வலரும் முன்னாள் கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாட்டோ வை.எல்.மன்சூர் வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுற்றுப்போட்டியில் கிழக்கின் வரலாற்று நாயகனும் அதன் தலைமையுமான அல்-ஹாபிழ் செய்னுலாப்தீன் நசீர் அஹமட் பிரதம அதிதீயாக காலந்து கொண்டு இரண்டு வாரங்களுக்குள் அலிகார் தேசிய பாடசாலையின் மைதானத்தினை புனரமைப்பு செய்து தருவதாக உறுதியளித்தமை ஏறாவூர் படித்த சமூகத்தின் மனதினை கொள்ளைகொள்ளும் விடயமாக அமைந்திருந்தது.




குறித்த வரலாற்று நிகழ்வின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 
– நன்றி ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

Comments