HIV AIDS ஆபத்து...

- எம்.எம்.ஏ.ஸமட் -

இன­வா­தி­களும் அவர்­களின் செயற்­பா­டு­களும் சமூக நல்­லி­ணக்­கத்தை ஆபத்­துக்குள் தள்­ளி­விடும் சம­கா­லத்தில், புதிய தலை­மு­றை­யி­னரின் விழுமம் கடந்த செயற்­பா­டுகள் அவர்­களை ஆபத்தின் எல்­லைக்கு இழுத்துச் செல்­கி­றது. 

மனித நடத்­தையின் நன்மை, தீமை­களை நிர்­ண­யிப்­பது விழு­மி­ய­மாகும். மனி­த­னுக்­குள்ள  சுதந்­திரம் கார­ண­மாக அவ­னு­டைய செயற்­பா­டுகள் விழு­மியத் தன்மை பெறு­கின்­றன. விழு­மி­யங்கள் மனித வாழ்வை நெறிப்­ப­டுத்தி வாழ்வை அர்த்­த­முள்­ள­தாக்­கு­கி­றது. ஆனால், வாழ்வை அர்த்­த­முள்­ள­தாக்கும் விழு­மியச் செயற்­பா­டுகள் சம­கா­லத்தில் மக்­க­ளி­டையே குறிப்­பாக நாக­ரிக போதைக்குள் மூழ்கிக்கொண்­டி­ருக்கும் பெரும்­பா­லான இளைஞர், யுவ­தி­க­ளி­டையே இல்­லாமல் போய்­விட்­டது. அதனால், பலரின் வாழ்க்கைப் பய­ணங்கள் திசை­மாறி ஆபத்­துக்கள் நிறைந்­த­தான அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்­டி­ருப்­பதைக் காண முடி­கி­றது.

மனிதன் வாழ்வில் முழுமைபெற வாழ்க்கை பற்றி சரி­யான மதிப்­பீ­டு­களைக் கொண்­டி­ருக்க வேண்டும். தனது வாழ்­வோடு தொடர்­பு­டைய யதார்த்த நிகழ்­வு­களில் அறி­வியல், ஆன்­மீகம், ஒழுக்கம் ஆகிய நெறி­களில் வாழ்வை எவ்­வாறு அமைத்­துக்­கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த இலட்­சி­யங்­களை வகுத்­துக்­கொள்ள வேண்டும். வாழ்வு பற்­றிய இலட்­சி­யங்­கள்தான் மனித சமூ­கத்­திற்கு வளர்ச்­சி­யையும், நிலை­யான தன்­மை­யையும் கொடுக்கும்.

அந்த இலட்­சி­யங்­களை அடைந்­து­கொள்­வ­தற்­கான விழு­மி­யங்கள் வாழ்வில் சரி­யான முறையில் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வது காலத்தின் தேவை­யா­க­வுள்­ளது. அவ்­வாறு விழு­மி­யங்கள் கடை­ப்பி­டிக்­கப்­ப­டாத நிலையில் அவை ஆபத்­துக்­களை விலை­யாக அடைந்து கொள்ளச் செய்­து­வி­டு­வதை அன்­றாடம் நடந்­தேறும் நிகழ்­வுகள் மூலம் அவ­தா­னிக்க முடி­கி­றது.

 19ஆம் நூற்­றாண்டின் பின்னர் உலகில் ஏற்­பட்ட சமூக, விஞ்­ஞான, தொழில்­நுட்ப வளர்ச்­சி­யா­னது நாக­ரி­கமுள்ள மனித வாழ்வின் விழு­மி­யங்­களை மாசு­ப­டுத்­தி­ய­தாக அமைந்­து­விட்­டது என்று கூறு­வதில் தவ­றே­து­மி­ருக்­காது. நாக­ரிகம் என்ற மாயைக்குள் மனி­த­குலம் புதைந்து, ஒழுக்­கத்­தையும் ஆன்­மீ­கத்­தையும் மறந்து, மனித வாழ்­வுக்கும் மிருக வாழ்­வுக்கும் வித்­தி­யா­ச­மில்லை என்­ற­தொரு நிலையை ஏற்­ப­டுத்­திக்­கொண்­டதன் விளை­வாக, அஞ்சி ஒதுங்கக் கூடிய, கேவ­ல­மாகச் சித்­த­ரிக்­கப்­ப­டக்­கூ­டிய பல விளை­வு­க­ளுக்கு மனித சமு­தாயம் ஆளாகிக்கொண்­டி­ருக்­கி­றது. 

விழு­மியம் மீறும் நாக­ரிகம்
மதங்­க­ளும், மதத்­த­லை­வர்­களும் போதிக்கும் ஒழுக்­க­வி­ழு­மி­ய­மிக்க நல்­வாழ்­வுக்­கான போத­னை­களும், வழி­காட்­டல்­களும் பின்­பற்­றப்­ப­டாது, அவற்­றினை உதா­சீனம் செய்து, தமது மன­வெ­ழுச்­சி­க­ளுக்கு  அடி­மை­யாகி நாக­ரிகம் என்ற போர்­வையில்  அநா­க­ரி­கத்­துக்குள் சிக்கிச் சீர­ழிந்­ததன் விளை­வாக ஆபத்­துக்கள் நிறைந்த பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலைக்கு மானிட வர்க்கம் தள்­ளப்­பட்­டுள்­ளது.

புறக்­க­ணிக்­கத்­தக்­க­தொரு கூட்­டத்­தைத் தவிர மதங்­களை ஏற்­றுக்­கொள்­ப­வர்கள், அந்த மதங்கள் வகுத்த நேரிய வழியில் தங்­க­ளது வாழ்க்­கையை அமைத்­துக்­கொள்­வதைத் தவிர்த்து,  ஒழுக்க விழு­மி­ய­மற்ற முறை­மை­களை நாக­ரி­க­மென்­றெண்ணி அவற்­றையே கடைப்­பி­டித்து வாழ முற்­பட்­டதன் கார­ண­மாக, குறிப்­பாக இளை­ஞர்கள் போதைப்­பொருள் பாவ­னைக்கு அடி­மை­யாதல், எயிட்ஸ், ஹர்பிஸ், கொனே­ரியா, சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்­க­ளுக்கு ஆளாதல், ஆளுமை உளக் கோளா­றுகள் போன்ற உள­ரீ­தி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு உட்­ப­டுதல், வேலை­யில்­லாத்­திண்­டாட்டம், பொரு­ளா­தாரப் பிரச்­சினை என பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு அவர்­களை முகங்­கொ­டுக்கச் செய்­துள்­ளது.

 மதங்கள் அங்­கீ­க­ரிக்­காத அவை தடுத்த, பாவங்கள் எனப் பிர­க­ட­னப்­ப­டுத்­திய விப­சா­ரத்­தையும், ஒருபால் பாலியல் தொடர்­பு­க­ளையும் ஒரு சில உலக நாடுகள் அங்­கீ­க­ரித்­ததன் கார­ண­மாக, இந்­நா­டு­களில் பாலியல் தொடர்­பான நோய்கள் குறிப்­பாக எயிட்ஸ் என்ற ஆட்­கொல்லி நோய்த்­தொற்று  ஆபத்து அதி­க­ரித்­துக்­கா­ணப்­ப­டு­வ­தையும் உல­க­ளா­விய புள்­ளி­வி­ப­ரங்­களின் ஊடாக அறிய முடி­கி­றது. உலகில் 77 நாடு­களின் சட்­டங்கள் இந்த ஒருபால் உற­வுக்கு தடை விதித்­துள்­ள­துடன் ஐரோப்­பிய ஒன்­றிய நாடுகள் உட்­பட  22 நாடு­களின் சட்­டங்கள் இதற்கு அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருக்­கின்­றன. இந்த 22 நாடு­க­ளிலும் காணப்­படும் பாலியல் நோய்­க­ளுக்கு பிர­தான கார­ண­மாக ஒருபால் உறவு காணப்­ப­டு­வ­தையும் சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­ய­மாகும்.

இவ்­வாண்டின் ஆரம்­பத்தில் இலங்­கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லு­கை­யற்ற வரப்­பி­ர­சா­தங்­களை வழங்­கு­வ­தற்கு ஒருபால் உறவை அங்­கீ­க­ரிக்­கு­மாறு ஐரோப்­பிய ஒன்­றியம் நிபந்­த­னை­யாக விதித்­த­தையும் அதனால், விழு­மி­யங்­க­ளோடு வாழ விரும்பும் மக்­க­ளும், மதத்­த­லை­வர்­களும் அதற்­கெ­தி­ராக கொதித்­தெ­ழுந்­த­தையும் அவற்றின் கார­ண­மாக அர­சி­யலில் வாதப் பிர­தி­வா­தங்கள் ஏற்­பட்­ட­தையும் இங்கு நினைவு கூரத்­தக்க விட­யங்­க­ளாகக் கொள்­ளலாம். 

மனித உரி­மைக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டு­மென்ற போர்­வையில் உலக நாடுகள் சில­வற்றில் அநா­க­ரி­கத்­துக்கும் அசிங்­கத்­திற்கும் வழங்­கப்­பட்­டுள்ள சுதந்­தி­ர­மா­னது இத்­த­கைய ஆபத்­துக்­க­ளினால் பெறு­ம­தி­மிக்க மனித வாழ்­நாட்­களைச் சுருக்­கிக்­கொண்­டு­விட்­டது என்­பதே நிதர்­ச­ன­மாகும். 

அசிங்­க­மான சுதந்­தி­ரங்­களை சுதந்­தி­ர­மாக அனு­ப­விக்க முற்­ப­டுவோர் ஆபத்­துக்­களை சுதந்­தி­ர­மாக,  சுய­மா­கவே வர­வ­ழைத்­துக்­கொள்­கி­றார்கள். குறிப்­பாக தகாத பாலியல் உற­வு­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள சுதந்­திரம் அல்­லது திரை­ம­றைவில் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஒழுக்க விழு­மி­ய­மற்ற தகாத பாலியல் தொடர்­புகள் கொன­ரியா, சிபி­லிசு, பாலு­றுப்பு உண்­ணிகள், ஹர்பீஸ் சிம்­பிலெக்ஸ், இரய்கோ மொனாரிஸ், எயிட்ஸ் போன்ற பாலியல் தொடர்­பான நோய்  ஆபத்­துக்­களை ஏற்­ப­டுத்­துகி­­ன்றன. இவை  வாழ்வின் இலட்­சி­யங்­களைச் சிதைத்து அவ­மா­னத்­தோடு வாழ்­நாட்­களை தொடரச் செய்­கி­றது. இறை தண்­ட­னைக்கும் ஆளாக்­கு­கி­றது. விழு­மி­யங்கள் அசிங்­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­போது இத்­த­கைய ஆபத்­துக்கள் தொடர்­க­தை­யாகத் தொடர்­கி­றது என்­றுதான் கூற வேண்டும்.

பாலியல் தொடர்­பான நோய்­களில் மனித ஆயுளை ஆட்டம் காணச் செய்யும் எச்.ஐ.வி. தொற்று அல்­லது எயிட்ஸ் என்ற உயிர்­கொல்லிப் பாலி­யல்­தொற்று நோயா­னது உல­கையே இன்று அதிர்ச்­சிக்குள் தள்­ளிக்­கொண்­டி­ருக்­கி­றது. ஆரோக்­கி­ய­முள்ள சமூகக் கட்­ட­மைப்பை முட­மாக்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது.

2015ஆம் ஆண்டின் எயிட்ஸ் தொடர்­பான சர்­வ­தேச புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் இந்நோய் தொற்று அடை­யாளம் காணப்­பட்ட காலம் முதல் உலக மக்கள் தொகையில் 78 மில்­லியன் பேர் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய்த்­தொற்­றுக்கு ஆளா­கி­யி­ருப்­ப­துடன் தற்­போது 36.7 மில்­லியன் மக்கள் உல­க­ளா­விய ரீதியில் இந்­நோய்த்­தொற்­றுடன் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள். இவர்­களில் 1.8 மில்­லியன் பேர் சிறு­வர்­க­ளாவர். 35 மில்­லியன் பேர் எயிட்­ஸுடன் தொடர்­பு­பட்ட நோயினால் உயிரிழந்­தி­ருப்­ப­தா­கவும்;  2015ஆம் ஆண்டில் 2.1 மில்­லியன் பேர் புதி­தாக இந்­நோய்த்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­துடன் அதில் 150,000 பேர் சிறு­வர்கள் எனவும் அவ்­வி­ப­ரங்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

அது தவிர, உலக சுகா­தார ஸ்தபா­னத்தின் புள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் வயது வந்த இளைஞர், யுவ­தி­களும் சிறு­வர்­க­ளுமே இந்நோய்த் தொற்­றுக்கு அதி­க­ளவில்  ஆளா­கி­யுள்­ளனர். இதன்­நி­மித்தம், ஆபி­ரிக்க நாடு­களில் 26.1 மில்­லியன் பேரும் வட அமெ­ரிக்க மற்றும் மேற்கு, மத்­திய ஐரோப்­பிய நாடு­களில் 2.3 மில்­லியன் பேரும், இலத்தின் அமெ­ரிக்­காவில் 1.6 மில்­லியன் மக்­களும், கிழக்கு ஐரோப்­பிய மற்றும் மத்­திய ஆசிய நாடு­களில் 1.1மில்­லியன் மக்­களும் ஆசிய மற்றும் பசுபிக் நாடு­களில் 4.8 மில்­லியன் வயது வந்­த­வர்­களும் சிறு­வர்­களும் எயிட்ஸ் தொற்­றுடன் வாழ்; நாட்­களை எண்­ணிக்­கொண்டு வாழ்­கி­றார்கள்.

இலங்­கையும் நாக­ரி­கத்தின் ஆபத்­துக்­களும்
இலங்­கையின் இள­வய­தி­னரின் நாக­ரிக நடத்­தைகள் அநா­க­ரி­கத்தை நோக்கி நகர்ந்து செல்­வ­தனால்  பல்­வேறு விளை­வு­க­ளுக்கு அவர்கள் முகம்­கொ­டுத்துக் கொண்­டி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது. குறிப்­பாக ஆண், பெண் நட்பு என்­பது பாலியல் உறவை அடைந்­து­கொள்­வது என்ற அர்­தத்­திற்­குள்­ளாகி அதற்­கான தவ­றான வழி­களைத் தேடிக்­கொண்டு அலையும் இளைய சமூ­கத்தின் எண்­ணிக்­கையை அறைகள் வாட­கைக்கு என்ற விளம்­ப­ரத்­துடன் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்ள வியா­பா­ரத்தை கணிப்­பிட்டுக் கண்டு கொள்ள முடி­வ­துடன், ஒவ்­வொரு வரு­டத்­திலும் பெப்­ர­வரி மாதம் 14ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்ற காதலர் தினத்தில் வாட­கைக்­காகப் பதிவு செய்­யப்­ப­டு­கின்ற அறை­களின் எண்­ணிக்­கையைக் கொண்டும் மதிப்­பிட்­டுக்­கொள்ள முடி­கி­றது.

இவ்­வா­றான தகாத உற­வு­க­ளினால் ஏற்­ப­டு­கின்ற இந்­நோய்­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­வர்­களின் எண்­ணிக்­கையில் கணிச­மான எண்­ணிக்­கை­யினர் இள­வ­ய­தி­ன­ராக உள்­ள­தாக சுகா­தார அமைச்சு சுட்­டிக்­காட்­டு­கி­றது. இலங்­கையில் 10 வய­திற்கும் 19 வய­துக்­கு­மி­டைப்­பட்­ட­வர்கள் பாலியல் நோய்­க­ளுக்கு ஆளாகி வரு­கின்­றனர் என்ற அதிர்ச்சித் தக­வல்கள் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தோடு எதிர்­கால சந்­த­தி­யி­னரின் இந்த ஆபத்­தான நிலை குறித்து சக­லரும் சிந்­திப்­ப­தையும் அவ­சி­யமாக்­கி­யி­ருக்­கி­றது.

பாலியல் சம்­பந்­த­மான  நோய்­க­ளுக்­காக சிகிச்சை பெற வரு­வோரில் பாட­சாலை மாணவ, மாண­வி­களும் இருப்­ப­தாக மருத்­துவ அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். இவை தொடர்பில் பெற்­றோர்­க­ளும், ஆசி­ரியர் சமூ­கத்­தி­னரும்  கூடு­த­லாக கவனம் செலுத்த வேண்­டு­மென வைத்­தி­யர்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­துடன், எதிர்­கா­லத்தில் பாட­சாலை மாண­வர்கள் மத்­தியில் பாலியல் நோய்கள் பரவும் ஆபத்திருப்­ப­தாக எச்­ச­ரித்­து­முள்­ளனர். அண்­மையில் அளுத்­கமைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த இரு பாட­சாலை மாண­விகள் எயிட்ஸ் நோய்த்­தொற்­றுக்­குள்­ளாகி இருந்­தமை அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­தா­னது இந்த வைத்­தி­யர்­களின் எச்­ச­ரிக்­கையை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நோய்த்தொற்­று அதி­க­ளவில் தகாத பாலியல் நடத்­தை­களின் கார­ண­மா­கவே ஏற்­ப­டு­கி­றது. விழு­மி­யங்கள் அசிங்­கப்­ப­டுத்­தப்­பட்டு இடம்­பெ­று­கின்ற விப­சா­ரமும், ஒருபால் உறவும் உலகில் மலிந்து கிடக்­கி­றது. மதங்­க­ளையும், கலா­சா­ரத்­தையும்  மதிக்­கின்ற நமது நாட்­டிலும் விப­சாரம் அதி­க­ரித்­து­விட்­டது. மசாஜ் சிகிச்சை நிலை­யங்கள் என்ற போர்­வையில் நடாத்­தப்­ப­டு­கின்ற பல விபசார நிலை­யங்கள் பொலி­ஸா­ரினால் முற்­று­கை­யி­டப்­பட்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அவ்­வப்­போது கைது செய்­யப்­படும் சம்­ப­வங்­களும் இடம்­பெ­று­கின்­றன.  
சமூக வலைத்தளங்கள் என்றும் கைய­டக்கத் தொலை­பேசி என்றும் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்­ப­டுத்­தி­யுள்ள வச­தி­களின் கார­ண­மாக தகாத உற­வுகள் ஏற்­பட்டு அதனால் கட்­டிக்­காக்­கப்­பட வேண்­டிய ஒழுக்க விழு­மி­யங்கள் சிதைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

தகாத பாலியல் உற­வு­க­ளினால் பாலியல் நோய்கள் மாத்­தி­ர­மல்ல உயிர் பலி­களும் ஏற்­ப­டு­கின்­றமை இளைய தலை­மு­றை­யி­னரின் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­குற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சமூக ஆர்­வ­லர்கள் கவலை வெளி­யி­டு­கின்­றனர்.

இலங்­கையில் 96 வீத­மானோர் பாலியல் காட்­சி­களைப் பார்ப்­ப­தற்கும் பிறரின் குற்­றங்­களைப் பகிர்ந்து கொள்­வ­தற்­குமே  இணை­யங்­களைப் பயன்­ப­டுத்­து­வ­தாக களனிப் பல்­க­லைக்­க­ழ­கத்தின்  பேரா­சி­ரியர் ரோஹண லக் ஷ்மன் பிய­தாச அண்­மையில் கொழும்பில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்றுகின்­ற­போது குறிப்­பிட்­டுள்ளார்.

 இதி­லி­ருந்து நாக­ரி­கத்தின் வெளிப்­பா­டுகள் அநா­க­ரி­கத்தை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருப்­ப­தையும் தகாத பாலியல் உற­வுகள் அவ­சி­ய­மற்ற கருக்­க­லைப்­புக்­க­ளையும் சிசுக்­கொ­லை­க­ளையும் இலங்­கையில் அதி­க­ரிக்கச் செய்துள்­ள­மையைக் காண முடி­கி­றது.

வரு­ட­மொன்­றுக்கு 400,000 பெண்கள் கரு­வு­று­கின்­ற­போ­தி­லும், இதில் 15,000 கருக்கள் சட்­ட­வி­ரோ­த­மாகக் கருக்­க­லைப்புச் செய்­யப்­ப­டு­கி­ன்றன.  இச்­சட்­ட­வி­ரோத கருக்­க­லைப்­பினால்  கரு­வு­று­கின்ற  பெண்­களில் 10 வீதத்­தினர் உயிர் இழக்­கின்­றனர். அத்­தோடு, 24,000 இள­வ­யதி­­னரும் கர்ப்­ப­ம­டை­வ­தா­கவும், இதற்கு போதிய கல்வி அறி­வின்மை, வறுமை, தகாத உற­வுகள் மற்றும் பாலியல் துஷ்­பி­ர­யோகம் என்­பவை கார­ண­மாக இருப்­ப­தா­கவும் நா­ளொன்­றுக்கு சரா­சரி 650 சட்ட விரோதக் கருக்­க­லைப்­புக்கள் இலங்­கையில் இடம்­பெ­று­வ­தா­கவும் சுகா­தாரத் தரப்புத் தர­வுகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

திரு­ம­ண­மா­காத பல யுவ­திகள் தகாத உறவின் மூலம் கரு­வுற்று கருக்­க­லைப்புச் செய்­வ­தையும், கரு­வினைக் கலைக்க முடி­யா­த­வர்கள் பிள்­ளை­க­ளைப் பெற்று அச்­சி­சுக்­களை வீதி­யோ­ரங்­க­ளிலும், காடு, பற்­றை­க­ளிலும் எறிந்து விட்டுச் செல்­வ­தையும் அதற்­காக அத்­த­கை­ய­வர்கள் கைது செய்­யப்­ப­டு­வதும் இலங்­கையில் இடம்­பெ­று­கின்ற குற்றச் செயல்­களின் பட்­டி­யலில் ஒன்­றாகக் காணப்­ப­டு­கி­றது. நாக­ரிகம் என்ற போர்­வையில் விழு­மி­யங்கள் மாசு­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­மைய இந்­நி­லை­மை­க­ளுக்­குக் கார­ண­மா­கி­றது என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­ய­மாகும்.

விழு­மியக் கல்­வியும் ஆபத்துத் தவிர்ப்பும்
அநா­க­ரிகப் போதைக்குள் விழுந்து தத்­த­ளிக்கும் இளம் சமுதா­யத்­தி­ன­ருக்கு ஒழுக்க விழு­மி­யங்­க­ளாடு வாழ்­வ­தற்­கான வழி­காட்­டல்கள் வழங்­கப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும். சமூக, பொரு­ளா­தார, குடும்ப சீர­ழிவை ஏற்­ப­டுத்தும் இத்­த­கைய ஒழுக்­க­வி­ழு­மி­ய­மற்ற நடத்தைப் பிறழ்­வு­க­ளி­லி­ருந்து எதிர்­கால சமூ­கத்தைப் பாது­காக்­கவும்  ஒழுக்­க­வி­ழு­மி­ய­மிக்க எதிர்­கால சமூ­கத்தை உரு­வாக்­கவும் விழு­மியக் கல்­வித்­திட்­டமும் விர­ச­மற்ற பாலியல் கல்­வியும் முறை­யாக பாட­சா­லை­களில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய தேவை உண­ரப்­ப­டு­வதும் அவ­சி­ய­மாகும்.

இலங்­கையில் மாணவப் பரு­வத்­தி­லுள்­ள­வர்­களும் எயிட்ஸ் தொற்­று­கைக்கு உள்­ளா­கி­யுள்­ளமை தொடர்பில் அவ­தானம் செலுத்­தப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் மாண­வர்­களை அறிவூட்டுவ­தற்­காக பாட­சா­லை­களில் பாலியல் கல்வி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­போது இக்­கல்வி நட­வ­டிக்­கை­களும் அதன் பாடப்­ப­ரப்­புக்­களும் பாலியல் நட­வ­டிக்­கை­களை ஊக்­கு­விப்­ப­தாக அமைந்து விடாத வகையில் இப்­பா­ட­துக்­கான பாடவிதான அலகுகள் தயார்படுத்தப்படுவது அவசியமாகும். 

சமூக ஒழுங்குப் பிறழ்வுகள், பயில் நிலை வழியாகச் சீர்படுத்தப்பட வேண்டுமாயின் பாடசாலைக் கலைத்திட்டத்தில் அனுபவங்கள்  உள்ளடக்கப்பட வேண்டும். பாடசாலைக் கலைத்திட்ட அமைப்பியலையும் அதன் சமகால செயல் நிலைகளையும் ஆராய்ந்து பார்க்கும்பொழுது  மாணவர்களிடையேயும் ஒரு சில ஆசிரியர்களிடையேயும் ஆரோக்கிய மனவெழுச்சிக்குரிய பயிற்சிகள் போதாமல் இருப்பது தெளிவாகிறது.

ஆரோக்கியமான மனவெழுச்சிக்குரிய பயிற்சிகளும் விழுமியக் கல்வியும் ஒன்றிணைந்தவையாகக் காணப்படுவது அவசியமாகும். தற்கால மாணவ சமூகத்தின் மனவெழுச்சிகள், மனப்பாங்குகள், நடத்தைக்கோலங்களை உற்றுநோக்குகின்றபோது அவை ஆரோக்கியமானதாக அமையவில்லை என்பதோடு இந்நிலைமைகள் பாடசாலைகளில் விழுமியக் கல்வியை வலியுறுத்தும் நிலையை உருவாக்கியுள்ளதாக கல்வியிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஏனெனில், ஒழுக்க விழுமியமுள்ள எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் கேந்திரத் தளமாக பாடசாலைகள் மிளிர்கின்றன.  பாடசாலைகளிலிருந்து ஒழுக்கவிழுமியமுள்ள எதிர்கால சமூகம் உருவாக்கப்படுவது இன்றியமையாதது.

நடத்தைப் பிறழ்வுகளால், விழுமியமற்ற செயற்பாடுகளால் ஏற்படுகின்ற நோய்கள் முதல் ஏனைய சமூகம் அங்கீகரிக்காத சமூக விரோத நடவடிக்கைகள் சமூகத்தின் மத்தியிலிருந்து ஒழிக்கப்பட வேண்டுமாயின், அதன் ஆபத்துக்கள் அதிகரிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டுமாயின் அவை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதுடன் ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடக்கக் கூடிய ஆரோக்கியமுள்ள எதிர்காலச் சமூகம் கட்டியெழுப்பப்படுவதும் காலத்தின் கட்டாயமாகும். இந்தக் கட்டாயத் தேவை உணரப்பட்டு செயல் உருவப்பெறுகின்ற போதுதான் எதிர்கால சந்தததியினரை  ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Comments