(ihzana fareed)

கல்குடா தொகுதி ஓட்டமாவடியில் 1917ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் நூற்றாண்டினை கொண்டாட உள்ள ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு சமூக சேவைகள் அமைப்பான நபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் கடந்த சனிக்கிழமை 01.04.2017 சினேக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதன் பொழுது நூற்றாண்டினை கொண்டாட உள்ள பாடசாலைக்கு உடனடி தேவைகளாக காணப்படுபவைகள் சம்பந்தமான வேண்டுகோள்கள் பாடசாலை நிருவாகத்தினால் பெளண்டேசனின் தலைவரிடம் முன்வைக்கப்பட்ட பொழுது மிக விரைவில் அவ்வாறான தேவைகளை பாடசாலைக்கு நாபீர் பெளண்டேசன் பூர்த்தி செய்து தருவதாக பொறியியளார் நாபீரினால் வாக்குறுதி வழங்கப்பட்டது.

மேலும் குறித்த நிகழ்வில் பாடசாலை நிருவாக சார்பாக அதிபர் அல்-ஹாஜ் ஹலீம் இஷ்ஹாக், பிரதி அதிபர் ஜனாப் மொகம்மட் கபீர், ஆசிரியர் எம்.எம்.நவாஸ், பெளண்டேசன் சார்பாக அதன் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதுடன் நூற்றாண்டு கிரிக்கட் சுற்றுப்போட்டிக்காக சாட்டோ மன்சூரினால் வழங்கப்பட்ட தொபிகள் இரண்டும், நினைவு கோப்பையும் பொறியியலாளர் நாபீருக்கு நினைவு பொருளாக பாடசாலை நிருவாகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

Comments