நீதிமன்ற கட்டளையை கிழித்தெறிந்த 04 பேருக்கு விளக்கமறியல்
கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் நீதிமன்ற கட்டளையை கிழித்தெறிந்த நான்கு பேரையும் இம்மாதம் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் இன்று (23) உத்தரவிட்டார்.
கடந்த 04ம் மாதம் 25ம் திகதி கிழக்கு மாகாண சபை அமர்வின் போது மாகாண சபைக்கு முன்னால் ஆர்பாட்டமொன்றினை கிழக்கு மாகாண வேலையில்லாப்பட்டதாரிகள்
மேற்கொண்ட போது திருகோணமலை தலைமையக பொலிஸாரினால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு கோவையிடப்பட்டு பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸாவினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதே வேளை அக்கட்டளையை கிழித்து எரிந்து காலால் மிதித்ததாக திருகோணமலை நீதிமன்றில் தலைமையக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவ்வழக்கு விசாரணை இன்று இடம் பெற்ற போதே கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த வேலையில்லாப்பட்டதாரிகள் நான்கு பேருக்குமே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்ட்டது.
இதில் தென்னஞானநந்த ஹிமி .தேவநாயகம் கிழிஷாந்தன்,செல்வராஜ் சிவகுமார்.ஜெகநாதன் பிரபு ஆகிய நாள்வருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


Comments
Post a Comment