தோப்பூர் பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் 09 விக்கெட்டுக்களால் வெற்றி
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 24 அணிகள் பங்கு கொள்ளும் 20-20 Tpl கிரிக்கெட் போட்டித் தொடரின் 10வது போட்டி செவ்வாய்க்கிழமை (09) மாலை தோப்பூர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இப் போட்டியில் தோப்பூர் நியூ ஸ்டார் , தோப்பூர் பாலத்தோப்பூர் ஆகிய அணிகள் மோதிய இப் போட்டியில் தோப்பூர் பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் 09 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தோப்பூர் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 19 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.இவ் அணி சார்பாக எம்.ஹாஜா முகைதீன் 35 மாத்திரம் அதிகபட்சமாக பெற்றார்.
129 என்ற இலகுவான வெற்றி இழக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய தோப்பூர் பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழகம் 13 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 129 என்ற வெற்றி இழக்கினை அடைந்தது.இவ் அணி சார்பாக எம்.நஸ்மீர் ஆட்டமிழக்காமல் 40 பந்துகளை எதிர் கொண்டு 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக துடுப்பாட்டத்தில் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்த தோப்பூர் பாலத்தோப்பூர் விளையாட்டுக் கழக வீரர் எம்.நஸ்மீர் தெரிவானார்.
இப் போட்டித் தொடரின் 10வது போட்டியில் பிரதம அதீதியாக மூதூர் பிரதேச சபையின் முன்னால் உறுப்பினர் ஏ.ஜீ நிஸ்மி கலந்து சிறப்பித்தார்.



Comments
Post a Comment