முள்ளிப்பொத்தானை சிறாஜ் இசுறு கலவன் வித்தியாலய மாணவர்களும் பழைய மாணவர்களும் தமது பெற்றோருடன் இன்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

-Ihzana Fareed

திருகோணமலை, கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை கோட்டத்திலுள்ள சிறாஜ் இசுறு கலவன் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி, அவ்வித்தியாலய மாணவர்களும் பழைய மாணவர்களும் தமது பெற்றோருடன் இன்று (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
539  மாணவர்கள் கல்வி பயின்று வரும் இந்த வித்தியாலயத்தில் 16 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனரெனவும் இன்னும் 20  ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தமிழ்  ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையே இந்த வித்தியாலயத்தில் நிலவுதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில், பல தடவைகள் கல்வி உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதும் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
-

Comments