2 வயது குழந்தை கடத்தல்; 3 மில்லியன் கப்பம் கோரி மிரட்டல்!
கம்பொல பகுதியில் நேற்றைய தினம் காணாமல் போனதாக கருதப்பட்ட 2 வயதுக்குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ளதுடன் குழந்தையை விடுவிக்க 3 மில்லியன் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.
கடத்தல்காரனின் அடையாளம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறித்த குடும்பத்துடன் நெருங்கிப் பழகி நம்பிக்கையைப் பெற்றிருந்த நபரே இவ்வாறு குழந்தையைக் கடத்தியுள்ளதாகவும் பொலிசார் மெலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment