மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழ்வருக்கு எதிரான வழக்கு விசாரணை 26ம் திகதி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழ்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 26ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபாவை வழங்காமை தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
இலங்கை போக்குவரத்து சபையால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்ஷன ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டு, முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட முறைப்பாட்டுக்கு எதிராக, மஹிந்த உள்ளிட்ட மற்றைய பிரதிவாதிகள் நால்வர் அடிப்படை ஆட்சேபனையை தெரிவித்தனர்.
இந்தநிலையில் இதற்கு ஆட்சேபனை வௌியிட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இறுதி வாய்ப்பை வழங்கும் முகமாக வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 26ம் திகதிக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Comments
Post a Comment