தென்­னி­லங்கை அமைப்­பொன்றை சேர்ந்த 300 க்கும் அதி­க­மான பௌத்த பிக்­குகள் இன்றையதினம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை

Ihzana Fareed

தென்­னி­லங்கை அமைப்­பொன்றை சேர்ந்த 300 க்கும் அதி­க­மான பௌத்த பிக்­குகள் இன்றையதினம் யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தந்து சமய அனுஷ்­டா­னங்­களில் ஈடு­ப­ட­வுள்­ள­னர்.

நாவற்­கு­ழியில் தேசிய வீட­மைப்பு அதி­கார சபைக்கு சொந்­த­மான காணியில் சிங்­கள மக்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்கள் வாழும் பிர­தே­சத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்­ப­தற்­கான அடிக்கல் நாட்­டப்­பட்­டது.

சாவ­கச்­சேரி பிர­தேச செய­ல­கத்தின் அனு­மதி பெறப்­ப­டாமல் கட்­டட வேலைகள் நடை­பெற்­ற­தனை அடுத்து பிர­தேச செய­ல­ரினால் கட்­டட வேலை­களை உடன் நிறுத்­து­மாறு எழுத்து மூலம் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்நி­லையில் இன்று வியா­ழக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்கு வருகை தர­வுள்ள 300 க்கும் அதி­க­மான பௌத்த பிக்­குகள் நாவற்­கு­ழியில் விகாரை அமைப்­ப­தற்கு அடிக்கல் நாட்­டப்­பட்ட இடத்தில்  சமய அனுஷ்­டா­னங்­களில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments