33 ஆவது முதலமைச்சர்கள் மாநாடு ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நடைபெற்றது

ஏ.எம்.ஏ.பரீத். 

 33 ஆவது முதலமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் நேற்று   (06) சனிக்கிழமை  முற்பகல் ஹபரண சினமன் லொஜ் விருந்தகத்தில் நடைபெற்றது.

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கினார்.

34 ஆவது மாநாடு நடைபெறவுள்ள வடமேல் மாகாணத்துக்கு முதலமைச்சர்கள் மாநாட்டின் தலைமைத்துவம் வழங்கப்பட்டது.

தற்போது தலைமை வகிக்கும் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன ஜனாதிபதி அவர்களது முன்னிலையில் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க அவர்களிடம் தலைமைத்துவத்தை ஒப்படைத்தார்.

முதலமைச்சர்கள், விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்கா, வடமத்திய மாகாண ஆளுனர் பீ.பி.திசாநாயக்கா, பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச அலுவலர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன உரையாட்டுகையில் 

தேசிய அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு அரசாங்கத்துக்கும் மாகான சபைகளுக்கும் இடையிலான ஒத்துளைப்பு விருத்தி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தி உள்ளார்.

பொதுவான அபிவிருத்தி இலக்குகளை எட்டும் போது மாகாண சபைகளின் கொள்கைகள் சமநிலை கொண்டதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டி காட்டினார் .

அரசியல் யாப்பு சட்டங்கள் மற்றும் அதிகாரங்கள் எந்த முறையில் இருந்த போதிலும் அதனை செயற்படுத்துவர்கள் கையில் தான் உள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மேலும்  தொரிவித்தார்  


Comments