கந்தளாய் பிரதேசத்திலிருந்து வேனொன்றில் குருனாகல் பகுதிக்குக்கு ஆடு கடத்திய இரண்டுபேர் கைது..

-Ihzana Fareed

கந்தளாய் பிரதேசத்திலிருந்து வேனொன்றில் குருனாகல் பகுதிக்குக்கு 61 ஆடுகளைள கொண்டு சென்ற இரண்டு பேரை நேற்று (14) கந்தளாய் குற்றத்தடுப்பு பிரிவினர் மடக்கிப்பிடித்ததாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சியபலகஸ்கொட்டுவ, ஹிஜ்ரா மாவத்தையைச்சேர்ந்த 40வயதுடைய முஸ்லிம் நபர்  மற்றும் கெகுனுகொல்ல, கடுபொத்த, மடலெஸ்ஸ பகுதியைச்சேர்ந்த  (35 வயதுடைய முஸ்லிம் நபர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த இரண்டு பேரும் 58-1924 எனும் இலக்க வேனொன்றில் கால்களை கட்டி ஆடுகளை ஒன்றோடொன்று பின்னி பினைத்து ஏற்றிச்சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை இன்று ககந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments